September 30 last date fill the kyc aadhar pan

செப்டம்பர் 30 கடைசி நாள் இந்த 5 விஷயத்தை மறக்காமல் செய்து விடுங்கள்( September 30 last date fill the kyc aadhar pan)

கொரோனா தொற்று காரணமாக பலவற்றுக்கு அரசு கூடுதலான காலத்தை அளித்துள்ளது, இது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை ஆனால் சிலர் கடைசி காலகட்டம் வரையில் கூட இதை செய்ய மாட்டார்கள்.

அப்படி பட்ட நபர்களுக்கு நினைவூட்டும் வகையில் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டிய மிக முக்கியமான 5 விஷயங்களை இந்த கட்டுரையில் முழுமையாக பார்ப்போம்.

வங்கி கணக்கில் மொபைல் எண் இணைக்க வேண்டும்.

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அனைத்து விதமான வங்கி ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கும் இரு முறை ஒப்புதல் முறையில் பணம் டெபிட் செய்யப்படும் இதனால் உங்கள் வங்கி கணக்கில் சரியான மொபைல் எண் கட்டாயம் இணைக்க வேண்டும்.

இல்லையெனில் ஆட்டோ டெபிட் செய்யப்படாமல் அபராதம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும் அதாவது வங்கிகள் தானாக டெபிட் செய்யும் பரிவர்த்தனைகளுக்கும் இனி உங்கள் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. இதனால் கட்டாயம் சரியான மொபைல் எண் உங்கள் வங்கி கணக்கிற்கு இணைக்கப்படவேண்டும்

வீட்டுக் கடன், வாகனக் கடன், கார் லோன், பர்சனல் லோன், கல்விக்கடன், கரண்ட் பில், போன் பில், கிரெடிட் கார்டு கட்டணம் என, ஒவ்வொரு மாதமும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் ஆட்டோ டெபிட் செய்யப்படும் தொகைக்கு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த முறை ஏப்ரல் 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் சரியான மொபைல் எண் இணைக்க செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.

September 30 last date fill the kyc aadhar pan

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு.

மத்திய அரசு ஆதார் கார்டு, பான் கார்டு இணைப்பிற்கு பலமுறை முன்பு கால அவகாசம் நீட்டிப்பு செய்தது, இந்த ஆண்டும் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது.

ஒருவேளை செப்டம்பர் 30 க்கு பிறகு இணைக்க படாவிட்டால் பான் எண் ரத்து செய்யப்படும், ரத்து செய்யப்படும் பட்சத்தில் புதிய பான் கார்டு தான் அனைவரும் பெற வேண்டும்.

இதற்கு 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மறக்காமல் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் இதனை செய்து விடுங்கள்.

டீமேட் கணக்கிற்கு KYC.

ஜூலை 30ஆம் தேதி பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனைத்து டீமேட் கணக்குகளுக்கும் KYC கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதற்கு முன்பு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்ததால் சில மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு இப்பொழுதும் பின்பற்றப்பட்டு இருக்கிறது, இதனால் இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்துள்ளது.

இந்த பெயர், முகவரி, மொபைல் எண், இமெயில், ஐடி வருமானம், விவரம் ஆகியவற்றை KYC கட்டாயம் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

முன்கூட்டியே வரி செலுத்துதல்.

2021-2022 வருகின்ற நிதியாண்டுக்கான முன்கூட்டியே வரி செலுத்த வருமானவரித்துறை தாக்கல் செய்வது போல கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, இதன்மூலம் செப்டம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்த நிலையில் இப்பொழுது 15 நாட்கள் நீட்டித்து உள்ளது.

வருமான வரி தாக்கல்.

புதிய வருமான வரி தளத்தில் இருக்கும் பிரச்சினைகள் காரணமாக மத்திய நிதி அமைச்சகம் மாத சம்பளக்காரர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது இப்பொழுது வருமானவரி தளத்தில் இன்னும் பல பிரச்சனைகள்  இருப்பதால் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

September 30 last date fill the kyc aadhar pan

Click here to view YouTube channel

இது வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை உறுதி செய்யப்பட்டுள்ளது,2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை செப்டம்பர் 30க்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

5 Benefits of eating peanuts for weight loss

5 லட்சத்திற்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் அளவில் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment