Shikakai powder ingredients amazing tips 2022
இயற்கை முறையில் வீட்டில் சீயக்காய் அரைக்க தேவையான பொருட்கள் என்ன..!
பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் தலைமுடி சம்பந்தமான பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.
அதிலும் பெண்களுக்கு சற்று நீளமான கூந்தல் வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருப்பதால், இதற்கு பல்வேறு வகையான வழிமுறைகளை செய்கிறார்கள்.
முடி கொட்டுவதற்கு பெரும்பாலான காரணம் ரசாயனம் கலந்த ஷாம்புவை பயன்படுத்துவது தான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்கு இயற்கையாக தயாரிப்புகள் பயன்படுத்துவது சிறந்தது.
அந்த வகையில் இந்த கட்டுரையில் வீட்டில் சீயக்காய் எப்படி தயாரிப்பது மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி முழுமையாக பார்க்கலாம்.
தேவையான மூலப்பொருட்கள் என்ன
சீயக்காய் -1 kg
அரப்பு – 500 கிராம்
பூந்திக்கொட்டை – 200 கிராம்
பசலைக்கீரை – 200 கிராம்
கரிசலாங்கண்ணி – 200 கிராம்
பொன்னாங்கண்ணி – 200 கிராம்
தூதுவளை – 50 கிராம்
வல்லாரை – 50 கிராம்
பச்சைபயிறு -450 கிராம்
வெந்தயம் – 100 கிராம்
கார்போக அரிசி – 50 கிராம்
வெட்டிவேர் – 50 கிராம்
கருஞ்சீரகம் – 100 கிராம்
பன்னீர் ரோஜா -50 கிராம்
துளசி – 50 கிராம்
நீலி அரிசி – 100 கிராம்
ஆவாரம்பூ – 100 கிராம்
வேப்பிலை – 100 கிராம்
கறிவேப்பிலை – 100 கிராம்
மருதாணி – 200 கிராம்
பெரிய நெல்லிக்காய் – 100 கிராம்
தோல் செம்பருத்தி பூ இலை – 250 கிராம்
எலுமிச்சை தோல் – 10
செய்முறை குறிப்பு 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சீயக்காய் 1 கிலோ,அரப்பு – 500 கிராம் சேர்த்து ஊற வைத்த பூந்திக்கொட்டை சேர்த்து அரைத்துக் கொள்ளவும், இதில் காயவைத்த பசலைக்கீரை 200 கிராம், காயவைத்த கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி,200 கிராம் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
செய்முறை குறிப்பு 2
தூதுவளை – 50 கிராம்,வல்லாரை – 50 கிராம்,பச்சைபயிறு -450 கிராம்,வெந்தயம் – 100 கிராம்,கார்போக அரிசி – 50 கிராம்,வெட்டிவேர் – 50 கிராம்,கருஞ்சீரகம் – 100 கிராம்,பன்னீர் ரோஜா -50 கிராம்,துளசி – 50 கிராம்,நீலி அரிசி – 100 கிராம் நிழலில் உலர்த்தி அரைத்துக்கொள்ளவும்.
செய்முறை குறிப்பு 3
Shikakai powder ingredients ஆவாரம்பூ – 100 கிராம்,வேப்பிலை – 100 கிராம்,கறிவேப்பிலை – 100 கிராம்,மருதாணி – 200 கிராம்,பெரிய நெல்லிக்காய் – 100 கிராம்,தோல் செம்பருத்தி பூ இலை – 250 கிராம்,எலுமிச்சை தோல் – 10 நிழலில் உலர்த்தி அரைத்துக்கொள்ளவும்.
செய்முறை குறிப்பு 4
அரைத்த பவுடர் அனைத்தையும் ஒன்றாக நன்கு கலந்து கொள்ளவும் இந்தப் பவுடரை நீங்கள் சாதம் வடித்த கஞ்சியுடன் கலந்து தலையில் 20 நிமிடம் ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும்.
செய்முறை குறிப்பு 5
Shikakai powder ingredients இயற்கைமுறையில் தயாரித்த இந்த பவுடரை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும் தலையில் உள்ள பொடுகு முடி கொட்டுதல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் இது நன்கு தீர்வு தரும்.