Shocking Continuing earthquake in Vellore 2021
அடுத்தடுத்து தொடரும் நில அதிர்வுகள் வேலூர் தான் மையம் ஏன் இப்படி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது..!
தமிழகத்தில் குறிப்பாக வேலூரில் தொடர்ந்து 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளார்கள்.
இதுவரை வேலூரில் எந்தெந்த பகுதிகளில் இதுபோன்ற நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்பதை முழுமையாக தெரிந்து கொள்வோம்.
கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி திருப்பத்தூரை மையமாகக் கொண்டு 4:15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது அதற்கு அடுத்தபடியாக.
வாணியம்பாடி அருகே ராமநாயக்கன் பேட்டை, தும்பேரி கிராமத்தில், இந்த அதிர்வை உணர்ந்து உள்ளார்கள்.
எனினும் பொருட்சேதம், உயிர்ச்சேதம், ஏற்படவில்லை என தமிழக அரசு இதைப்பற்றி தெரிவித்துள்ளது.
எனினும் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தட்டப்பாறை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் விரிசல் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.
டிசம்பர் மாதம் 22ஆம் தேதி பெங்களூரில் அடுத்தடுத்து இரு முறை நில அதிர்வுகள் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானது 7:00 ஒன்றும், காலை 7.15 மணிக்கு மற்றொன்று ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 23-ஆம் தேதி சித்தூரில் மதியம் 3.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பூமியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது என்று இந்திய புவியில் மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மூன்றாவது முறையாக இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது இதனால் மக்கள் மிகவும் அச்சப்பட்டு உள்ளார்கள்.
பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் இதற்கு என்ன காரணம் என்று குறித்து விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள.
மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்ன
இந்திய புவியியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள், எனினும் இதுவரை வந்த நில அதிர்வுகள், அதற்கு என்ன காரணம் என்று முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.
Neurobion forte tablet uses 5 benefits
தமிழகத்தில் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3வது முறையாக இதுபோன்ற நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் பீதியடைந்து உள்ளார்கள்.