Silkworm Best business ideas 2020 in Tamil

ஓராண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும் இந்த தொழிலில்.!!!(Silkworm Best business ideas 2020 in Tamil  )

தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது இந்திய அளவில் ஒப்பிடுகையில்.

விவசாயத் துறையை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது.புதிய தொழில்நுட்பங்கள் மூலம் இயற்கையான முறையில் அதிக மகசூல் அல்லது அறுவடை செய்வதற்கு காலத்திற்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மாவட்டங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு ஆலோசனை மையங்களை நடத்தி வருகிறது.

இந்தியாவிலே குறிப்பாக தமிழகத்தில் பட்டுப்புழு வளர்ப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகள் மூலம் இந்தியாவில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 5 லட்ச ரூபாய் வரை  சரியான முறையில் பட்டுப்புழு வளர்ப்பு அறுவடை செய்தால் லாபம் கிடைக்கிறது.

விவசாயிகளுக்கு பட்டுப்புழு அறிவு சார்ந்த பயிற்சி வழங்குதல்.

Silkworm Best business ideas 2020 in Tamil

புதிய தொழில்நுட்பம்  புகுத்துதல் போன்றவற்றின் மூலம் பட்டுப்புழு வளர்ப்பில் இப்பொழுது ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பட்டுப்புழு வளர்ப்பில் லாபம் தரக்கூடிய தொழிலாக மாறியுள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டுப்புழு வளர்ச்சியை ஊக்குவிக்க தனியாக ஒரு அலுவலகம் அமைத்து அதன் மூலம் விவசாயிகளை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான பயிற்சி அளித்து, மானியம் கொடுத்து, அறுவடை செய்யப்படும் பட்டுப் புழுக்களை தமிழக அரசே நேரடியாக எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த தொழிலில் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லாமல் செய்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் விவசாயிகளுக்கு நேரடியாகவே லாபம் கிடைக்கிறது.

இந்தத் தொழிலை கிராமப்புறங்களில் இன்னும் பாரம்பரிய தொழிலாகவும் சில விவசாயிகள் செய்து வருகிறார்கள். மேலும் இந்தத் தொழில் மூலம் குறிப்பிட்ட அளவில் வேலை வாய்ப்பு உருவாகிறது மற்றும் இந்த தொழிலுக்கு இப்போது நஷ்டம் என்பதே கிடையாது சூழ்நிலை உருவாகியுள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள் மூலம் குறைந்த அளவில் முதலீடு

விவசாயிகளுக்கு இருக்கும் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் அது நீர் பற்றாக்குறை அதனைப் போக்குவதற்கு தமிழக அரசு சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக அளவில் மானியம் வழங்குகிறது. இதன் மூலம் நீர் சேமிப்பு முறையை விவசாயிகள் கடைபிடிக்கலாம்.

விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பட்டுப்புழு வளர்ச்சிக்கு தேவையான செடிகளை (மல்பெரி) நடவு செய்தது, பட்டுப்புழு பண்ணை அமைத்து, பட்டுக்கூடு உற்பத்தி, மேற்கொள்வதன் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரை லாபம் பார்க்க முடியும்.

இப்பொழுது இருக்கும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பட்டுபுளு செடி (மல்பெரி)  ரகங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள. இதன் மூலம் பெரிய இலைகள் அதிக மகசூல் கிடைக்கிறது..

அரசு வழங்கும் மானியம் விவரங்கள்.

Silkworm Best business ideas 2020 in Tamil

பட்டுப்புழு தொழில் செய்யும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் திட்டங்களில் ஆண்டுதோறும் புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்கிறது அதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயன் பெறுகிறார்கள்.

உயர்ரக (மல்பெரி)   நடவு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 10 ஆயிரத்து 500 முதல் அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு 52,500 வரை அரசு மானியமாக வழங்குகிறது. மேலும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நவீன பட்டுப்புழு குடில் அமைப்பதற்கு தேவையான கருவிகளை வழங்குகிறது.

Top 10 Business Ideas for Agriculture 2020

புதிதாக பட்டு தொழில் செய்யும் அல்லது விரும்பும் நபர்களுக்கு தமிழக அரசு ஓசூரில் உள்ள தமிழ்நாடு பட்டு பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது மற்றும் அவர்களுக்கு ரூபாய் 7,000 ஊக்கத் தொகையுடன் 5 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேளாண் சார்ந்த துறைகளில் அதிக லாபம் தரக்கூடிய சிறு தொழில்கள்.!!!

மேலும் இந்த தொழிலை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அல்லது இந்த தொழில் செய்யும் யோசனைகளில் உள்ள நபர்கள் உங்கள் மாவட்டங்களில் உள்ள பட்டுப்புழு வளர்ச்சி மையத்தை அணுகலாம்.

twitter

What’s Up Group

Telegram Group

Leave a Comment