கருப்பு பூஞ்சை தொற்றிலிருந்து உங்களை பாதுகாக்க இந்த மூன்று விஷயங்களை நீங்கள் சரியாக பின்பற்றினால் போதும்.( simple 3 tips How to prevent black fungus)
ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, படுக்கை வசதி, உள்ளிட்டவைகளில்யிருந்து இந்தியா பொழுது மெல்ல மெல்ல மிண்டுக் கொண்டிருக்கிறது ஆனால் இப்பொழுது புதிய ஆபத்தான நோய் தென்பட தொடங்கியுள்ளது.
கருப்பு பூஞ்சை என்பது ஒரு வகையான நோயாகும் இது நீண்டகாலமாக ஸ்டெராய்டுகள் வழங்கப்பட்ட நோயாளிகளில் பொதுவாக காணப்படுகிறது இது முதன்முதலில் இந்தியாவில் மும்பையில் 2 நபர்களுக்கு இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் இப்பொழுது இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இந்த கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
கொரோனா நோயாளிகளை ஏன் தாக்குகிறது கருப்பு பூஞ்சை.
கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் உடலை பலவீனமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைவாகும் விடக்கூடும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு அல்லாத கொரோன நோயாளிகளில் அவர்கள் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்க முடியும் இது பூஞ்சைத் தொற்று ஏற்பட முக்கிய காரணமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் சில எளிய பல் சுகாதார விதிகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் கருப்புப் பூஞ்சை உள்ளிட்ட வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்று நோய்களை பிடிக்கும் வாய்ப்புகள் ஒருவர் குறைக்க முடியும் என்று பல் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கருப்புப் பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்ன.
கருப்புப் பூஞ்சை இந்த நோயின் முக்கியமான அறிகுறி வாய்வழி திசுக்கள் தான் நாக்கு, ஈறுகள், மூக்கடைப்பு, கடுமையான வலி, முகத்தில் வீக்கம், கண்களுக்கு கீழே கருப்பு கலரில் கனத்ததன்மை, காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும் கருப்புப் பூஞ்சை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு 3 வழிகளில் உங்களால் குறைக்க முடியும் என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.
வாய்வழி சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணம்மடைந்த நபர்கள் பிறகு ஸ்டெராய்டுகள் மற்றும் பிற மருந்துகளை உட்கொள்வது வாயில்யுள்ள பாக்டீரியா அல்லது பூஞ்சை வளர்ந்து சைனஸ், நுரையீரல் மற்றும் மூளையில் கூட சிக்கலை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 முறை அல்லது 3 முறை பல் துலக்குவதன் மூலம் உங்கள் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் முடியும் மற்றும் வாய் சுத்தம் செய்வது பூஞ்சைத் தொற்றில் இருந்து தப்பிக்க இருக்கக்கூடிய முதன்மையான வழி.
நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.
கொரோனா நோய்க்கு பிறகு நல்ல வாய்வழி சுகாதாரத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும் நோயின் தாக்கத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள செய்ய வேண்டிய முதன்மையான விஷயமாகும். நோயாளிகள் எதிர்மறை முடிவை பெற்றவுடன் பல் துலக்கும் பிரஷ்ஷை கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் தொடர்ந்து வாயை கொப்பளிக்கவும் தினம்தோறும் 2 அல்லது 3 முறை.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள உணவு பரிந்துரைகள்.
நீங்கள் பயன்படுத்தும் பிரஷ்ஷை எப்பொழுதும் மற்றவர்கள் வைக்கும் இடத்தில் வைக்க கூடாது ஆன்டி-செப்டிக் மற்றும் மவுத்வாஷ் பயன்படுத்தி ப்ரஸ் மற்றும் டங் கிளீனரை நீங்கள் தவறாமல் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும் இது அனைத்து விதமான தொற்று நோயில் இருந்து உங்களை பாதுகாக்கும்.