Simple one electric scooter specification 2023

Simple one electric scooter specification 2023

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் 300 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கிறது, இந்தியாவை கலக்கப்போகும் தமிழக தயாரிப்பு..!

பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு சிம்பிள் எனர்ஜி நிறுவனம் ஒரு வழியாக தனது சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதியை அறிவித்துவிட்டது, இது குறித்து முழுமையான தகவல்களை காணலாம்.

இந்தியாவில் ஸ்கூட்டர் செக்மெண்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகமாகி வருகிறது, குறிப்பாக ஓலா மற்றும் எத்தரின் வருகைக்குப் பிறகு ஏராளமான மக்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஆர்வம் காட்டி வாங்குகிறார்கள்.

அந்த வரிசையில் ஓலாவுக்கும் எத்தருக்கும் போட்டியாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம், சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டர் அறிமுகத்தின் போது சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த ஸ்கூட்டர் தயாரிப்பில் காலதாமதம் ஏற்பட்டது.

ஒரு வழியாக தமிழகத்தில் இந்த நிறுவனம் தொழிற்சாலை அமைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் இதற்கு முன்னதாக பல்வேறுமுறை ஸ்கூட்டரின் அறிமுக தேதி குறித்து திட்டமிடப்பட்டு, அதை பின்னல் திரும்ப பெறப்பட்டுள்ளது, ஒரு வழியாக தற்போது இறுதியாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Simple one electric scooter specification 2023

Simple one electric scooter specification 2023

வரும் மே 23ஆம் தேதி சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியிடுகிறது.

பெங்களூருவில் தனது அறிமுக நிகழ்ச்சியை நடத்துகிறது, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை பொறுத்தவரை இந்தியாவில் அதிக மைலேஜ் திறன் கொண்ட ஸ்கூட்டர்களில் நம்பர் ஒன்றாக இருக்கிறது.

சிம்பிள் ஒன்  ஸ்கூட்டர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைக்கப்பட்டாலும் இந்த ஸ்கூட்டர் தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர இந்தியாவில் சில ஆட்டோமொபைல் சட்டங்கள் உள்ளது.

156 தர கட்டுப்பாடுகள் 3 பேட்டரி தர கட்டுப்பாடுகள் ஆகியவற்றை கடந்து தற்போது உற்பத்தி துவங்கி நடந்து வருகிறது, வரும் மே மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Which bank is best for personal loan 2023

சிம்பிள் ஒன் ஸ்கூட்டடரை பொறுத்தவரை சிறிய பேட்டரியில் 236 கிலோமீட்டர் ரேஞ்ச் கொடுக்கக்கூடியது, இதன் பெரிய பேட்டரி விருப்பத்தில் 300 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

Simple one electric scooter specification 2023

Simple one electric scooter specification 2023

இது 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.77 வினாடியில் எட்டும் எனவும், இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 105 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் அம்சம் கொண்டது.

What are the symptoms of high blood sugar

சிம்பிள் ஒன் ஸ்கூட்டடரின் பேட்டரி பொருத்தவரை 4.8 கிலோ வாட் ஹவர் மற்றும் 8.5 கிலோ வாட் ஹவர் என இரண்டு பேட்டரி விருப்பங்கள் உள்ளது, இந்த ஸ்கூட்டரில் பிரேக் பொருத்தவரை இரண்டு வீல்களிலும் டிஸ்ப்ரேக் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் விலை பொருத்தவரை ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ரூபாய் 1.10 லட்சம் என்ற விலையிலும் எக்ஸ்ட்ரா ரேஞ்ச் வேரியண்ட் ரூபாய் 1.45 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

இந்த ஸ்கூட்டர் 4 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

Leave a Comment