Simple Remedies To Cure Migraine Best 5 tips
ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..!
ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கம் மட்டுமே வலி ஏற்படுவதாகும் பொதுவாக தலைவலி என்பது தலையின் முழுபகுதியும் வலி ஏற்படும்.
ஒற்றை தலைவலி சற்று வித்தியாசமானதாக இருக்கும், தலையின் ஒரு பக்கம் மட்டும் வலி ஏற்படும், மற்ற பக்கம் எந்த ஒரு வலியும் இருக்காது.
இந்த ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்ன
உடல் உணர்வுகளில் மாற்றங்கள், தலைவலி குமட்டல், போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இந்த ஒற்றைத் தலைவலி இருக்கும்.
இந்த நோய் கண் புலத்தில் மாற்றம் தெரியும்.
கால் மூட்டுக்கள் மற்றும் கழுத்துப் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற பல்வேறு வகையான உணர்வுகள் ஏற்படும்.
உடல் சமநிலை இழந்து விடுதல், பேச்சில் தடுமாற்றம், போன்றவை ஏற்படும்.
உணவின் சுவை நுகர முடியாது.
ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள் என்ன
குறிப்பாக மன அழுத்தம், கோபம், பதட்டம், மற்றும் அதிர்ச்சி போன்ற மனம் சார்ந்த காரணங்கள் முக்கியமாக அமைகிறது.
களைப்பு, அதிக நேர பயணம், சரியான தூக்கமின்மை, மாதவிடாய் பிரச்சினை, போன்ற உடல் பிரச்சினைகளிலும் ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
அதிகமாக சாப்பிடுவது, சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, தண்ணீர் சரியாக குடிக்காமல் இருப்பது, மது அருந்துவது, காபி, டீ, சாக்லெட் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற உணவுகளை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஒற்றைத்தலைவலி தோன்றும்.
ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் என்ன
ஒற்றைத் தலைவலியை மாத்திரையால் குணப்படுத்த முடியும், ஆனால் எந்த ஒரு மாத்திரையும் எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளக்கூடாது.
உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால், அந்த நோய் ஏற்படுவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும், அதன்பிறகு இந்த நோயை குணப்படுத்தலாம்.
ஒருவேளை ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்பட்டால் அமைதியான இடத்தில் சற்று ஓய்வெடுங்கள், சத்தம் இல்லாத அல்லது இருட்டு அறையில் முடிந்த அளவு சிறிது நேரம் குட்டித்தூக்கம் தூங்கவும்.
ஒற்றைத் தலைவலி குணமாக உணவுகள்
Simple Remedies To Cure Migraine ஒற்றைத்தலைவலி முழுவதும் குணமாக மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் உணவுகள், தானியங்கள் மற்றும் திணை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பால், காபி, பிராய்லர் கோழி மற்றும் ஆளி விதைகள் அதிகம் உள்ள உணவுகளில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால், இந்த பிரச்சனையை சரிசெய்யலாம், இந்த உணவுகள் அனைத்தும் ஒற்றை தலைவலி குணமாக பெரிதும் பயன்படும்.
ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்
Simple Remedies To Cure Migraine ஒற்றை தலை குணமாக எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
ஒற்றைத் தலைவலி நீங்க குளிர்ந்த நீரை துணியால் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்ட வேண்டும்.
பின்பு கை மற்றும் கால் இரண்டையும் வெண்ணீரில் விடவும் இவ்வாறு செய்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி உடனடியாக குணமாகும்.
முட்டைக்கோஸ் இலையை நன்றாக கசக்கி சாறு பிழிந்து ஒரு துணியில் கட்டி தலை மீது ஒத்தடம் தரலாம்.
மாலை நேரத்தில் வெந்நீரில் குளித்தால் அனைத்து வகையான உடல் பிரச்சினைகள் உடனடியாக சரியாகும்.