5th வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை.(Sivagangai recruitment 2020 Quick Apply)
தமிழக அரசு கடந்த சில நாட்களாகவே காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. அதன் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 60 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது குறைந்தபட்ச கல்வித்தகுதி ஐந்தாம் வகுப்பு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படிக்கவும்.
நிர்வாகம்: சிவகங்கை மாவட்டம்
மேலாண்மை: தமிழ்நாடு அரசு
பதவியின் பெயர்: கிராம உதவியாளர்
பணியிடம்: சிவகங்கை மாவட்டம்
ஊதியம்: 11,100 முதல் 35,100 வரை
வயது வரம்பு.
குறைந்தபட்ச வயது வரம்பு.
01/07/2020 அன்று குறைந்தபட்ச வயது 21
அதிகபட்ச வயது வரம்பு 01/07/2020
பொதுப்பிரிவினர் (OC) -30 வயது
பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)-35 வயது
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்)-35 வயது
ஆதிதிராவிடர் (SC&SCA) மற்றும் பழங்குடியினர் (ST)- 35 வயது.
தேர்வு செய்யும் முறைகள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 20/11/2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கல்விச் சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று மற்றும் ஆதார் கார்டு போன்ற சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் நாள் குறித்து அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வேலைவாய்ப்பு 2020
விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
ஊதியம் குறைந்தபட்சம் ரூபாய் 11,100 முதல் அதிகபட்சம் ரூபாய் 35,100 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில் மாலை 5.45 க்குள் நேரடியாக வழங்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.
இந்தியாவில் இருக்கும் சிறந்த திட்டங்கள்
விண்ணப்பத்தை இணையதளம் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்.
இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.twitter