small business ideas and more profit 2021
பொக்கே தயாரிப்பில் இவ்வளவு வருமானமா பூங்கொத்து தயார் செய்து அதிக லாபம் ஈட்டுவது எப்படி..!
பொதுவாக இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எந்த ஒரு பொருட்களுக்கும் ஆயுட்காலம் சில நாட்கள் ஆனால் அதனுடைய மதிப்பு என்பது 1,000/- கணக்கில் நிகழ்கிறது.
பூ வைத்து செய்யப்படும் எந்த ஒரு வணிகமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைகிறது,இப்பொழுது கோயில்கள், திருமணங்கள், வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், என அனைத்து நிகழ்வுகளிலும், பூ முதன்மையாக இருக்கிறது.
இந்தப் பூவை வைத்து எந்த ஒரு தொழில் செய்தாலும் நீங்கள் அதிகமான லாபத்தை அடைய முடியும்.
பொதுவாக இயற்கையாக தயாரிக்கப்படும் பொக்கே பூ ஆயுள் சில நாட்களில் முடிந்துவிடுகிறது, எனவே நிரந்தரமாக உங்கள் வீட்டை அலங்கரிக்க அல்லது நீங்கள் வணிகம் செய்யக்கூடிய தொழிலுக்கு அலங்கரிக்க கூடிய செயற்கை பொக்கே தயார் செய்யலாம்.
செயற்கை பூ வகைகளுக்கு மக்களிடத்தில் இப்பொழுது அதிக வரவேற்பு உள்ளது, ஏனென்றால் சுபநிகழ்ச்சிகளுக்கு இயற்கையான பூவை வைத்து அலங்காரம் செய்தால் 20,000/- முதல் 30,000/- வரை செலவாகும்.
ஆனால் இந்த செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பூ வகைகளை வைத்து அலங்காரம் செய்தால் சில 1000/- செலவுகள் முடியும்.
எனவே செயற்கை பூ பொக்கே தயார் செய்து விற்பனை செய்தால் நீங்கள் ஒரு அளவுக்கு லாபத்தை பெற முடியும்.
செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கே யார் வேண்டுமானாலும் எளிதாக தயார் செய்துவிடலாம், மேலும் காதலர் தினம், திருமண வரவேற்பு, கோயில் நிகழ்ச்சிகள், போன்ற சுப நிகழ்ச்சிகளில் செயற்கை பொக்கே அதிகம் இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது.
எனவே அதிகம் வரவேற்பு உள்ள இந்த தொழிலில் குறிப்பாக காதலர் தினத்திற்கு சிவப்பு ரோஜாக்களும், நண்பர்கள் தினத்திற்கு பிங்க் கலர் ரோஜா வகைகள் அதிகம் விற்பனையாகிறது.
எனவே அந்த தினங்களுக்கு ஏற்ற வகைகளை தயாரித்து, விற்பனை செய்யலாம், இதன் மூலம் அதிகமான வருமானத்தை நீங்கள் பெற முடியும்.
பொக்கே தயார் செய்வது எப்படி
பொக்கே கோன், பூ ,ஆகியவற்றை தனித்தனியாக தயாரிக்க வேண்டும்.
ரப்பரை முக்கால் அடி உயரம், ஒன்றரை இன்ச் திறப்பு உள்ளவாறு சுற்றினால் கோன் தயார்.
பூ தயாரிக்க முதலில் இதழ் தயாரிக்க வேண்டும், பின் அவற்றை பூவாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒரு பூவுக்கு ஏழு இதழ்கள் தேவை, இதழ் தயாரிக்க ஆர்கன்டி துணியில் ஒன்றேமுக்கால் அளவில் 1 துண்டு, 2 இன்ச் அளவில், 1 துண்டு, 2இன்ச் அளவில், 2 துண்டு, 2 இன்ச் அளவில் 1 துண்டு, 3 இன்ச் அளவில் 2 என, மொத்தம் 7 துண்டுகளை வெட்டி கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக மடித்து இதழாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதழ் செய்ய முதலில் ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக துண்டின் வலது, இடது புற, முனைகள் தொடும் வகையில் மடிக்க வேண்டும்.
பின்னர் கீழ் மேல் முனைகள் இணையும் வகையில் மடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதை சமமாக இடது வலது புறமாக மடிக்க வேண்டும்.
இரு முனைகளையும் வெளிப்புறமாக மடித்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது சிறியது முதல் பெரியது வரை வெவ்வேறு அளவுகளில் தனித்தனி இதழ்கள் தயாராகும்.
பூ தயாரிக்க முதலில் 5 இன்ச் நீளமுள்ள கம்பியை எடுத்து கொள்ள வேண்டும்.
மேல் பகுதியை கொக்கி போல் வளைத்து சிறிய இதழை அதில் செருக வேண்டும் பின்னர் அடுத்தடுத்த இதழ்களை ஒன்றாக சுற்றி வைத்து பச்சை நிற நூலால் கட்ட வேண்டும், இதழ்களையும் கட்டி முடித்தால் பூ தயாராகும்.
பூவின் கீழ்ப்பகுதி முதல் கம்பி முழுவதும் கிரீன் பேப்பர் அல்லது டேப்பால் சுற்றினால் கம்பி பச்சை நிற காம்பாக தோற்றமளிக்கும்.
காம்போடு கூடிய முழுமையான பூ தயாராகும், ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பொக்கே கோனில் கிரீன் கிராப்பை கொத்தாக சொருகி அதன் மேல் பூவை சொருகினாள் செயற்கை சிங்கிள் பொக்கே ரெடி.
பொக்கே பூ தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள்
பொக்கே தயாரிப்பு ஆர்கண்டி துணி ஒரு மீட்டர் 30 முதல் 40 ரூபாய் வரை.
பொக்கே பூ கட்டும் கம்பி (தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் கிடைக்கும்) ஒரு கம்பி 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை விலை இருக்கும்.
தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் என்ன மாற்றம் உடலில் நிகழும்.
கிரீன் பேப்பர் அல்லது டேப் ஒரு 25 ரூபாய் முதல் 30 ரூபாய்க்குள் இருக்கும்.
க்ரீன் கிராப் காம்பு தனியே கதிரின் சருகு போல் சுற்றி இலைகளாக அமைக்க பயன்படுவது, பல கலர்களில் கிடைக்கும், 100 கிராம் பாக்கெட் ரூ25/- 4 இதனை பயன்படுத்தலாம்.
top 10 Nethili meen amazing health benefits
மூலப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள்
பொக்கே தயாரிப்பில் ஸ்டேஷனரி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்டோர்களிலும், இணையதளங்களிலும் கிடைக்கிறது.