Small new profitable business ideas 2021
வீட்டிலிருந்தே இந்த தொழில் செய்தால் மாதம் 5 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
புதிதாக என்ன தொழில் துவங்கலாம் என நினைக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கு வணக்கம் இன்றைய காலத்தில் உணவு பொருட்கள் உற்பத்தி துறை நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது.
இப்போதெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப்பண்டங்களை பொது மக்கள் தங்கள் வீட்டில் செய்து சாப்பிடுகிறார்கள்.
ஆனால் இந்தக் குர்குரே தயார் செய்வது என்பது சற்று கடினமான ஒரு விஷயம் எனவே இதனை மக்கள் பெரும்பாலும் கடைகளில் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
எனவே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் தினந்தோறும் நீங்கள் நல்ல லாபம் பார்க்க முடியும்.
மேலும் இந்த வகையான குர்குரே நவீன இயந்திரங்கள் பயன்படுத்தி இப்பொழுது தயாரிப்பதால் நல்ல தரமான சுவையாகவும் தயாரிக்க முடியும் அதேபோல் இந்த தொழிலுக்கு 25 சதவீதம் வரை மத்திய அரசு மானியம் அளிக்கிறது.
தயக்கமில்லாமல் இந்த தொழிலை நீங்கள் செய்யலாம் அதனைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.
இதற்கு தேவையான இடவசதி
வீட்டிலிருந்தபடியே இந்த குர்குரே தயாரிப்பு தொழிலை எளிமையாக செய்யலாம் எனவே வீட்டில் 20 க்கு 20 அடி கொண்ட ஒரு சிறிய அறை இதற்கு தேவைப்படும், இயந்திரங்களை வாங்கி தயாரிப்பு தொழிலை எளிமையாக செய்யலாம்.
தேவைப்படும் மூலப் பொருட்கள்
இந்த குர்குரே தயார் செய்வதற்கு சோளமாவு, கடலை எண்ணெய், மசாலா பொருட்கள், மற்றும் பேக்கிங் கவர் போன்ற மூலப்பொருட்கள் அவசியம் தேவைப்படுகிறது.
இதற்கு தேவையான இயந்திரம்
இந்த குர்குரே தயாரிப்பு தொழில் பொருத்தவரை மூன்று வகையான இயந்திரங்கள் தேவைப்படும், சரி அந்த இயந்திரங்கள் பெயர் மற்றும் அதன் விலை விவரங்களை பற்றி முழுமையாக இப்பொழுது பார்க்கலாம்.
குர்குரே தயாரிப்பு இயந்திரம்
இந்தக் குர்குரே தயாரிப்பு இயந்திரத்தில் குர்குரே மாவைக்கொட்டினால் அந்த மாவை சிறு சிறு துண்டுகளாக உருண்டு கட்டி செய்து வெளிஅனுப்பிவிடும் இந்த இயந்திரம்.
அனைத்து இணையதள ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது இது ரூபாய் 1,40,000/-வரை விற்பனை செய்யப்படுகிறது.
குர்குரே பொரித்துதெடுப்பதற்கு
குர்குரே பொரித்துதெடுப்பதற்கு இந்த இயந்திரம் அவசியம் தேவைப்படுகிறது, இந்த இயந்திரத்தின் விலை தற்போது 1,00,000/- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த இயந்திரம் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது தேவை என்றால் நீங்கள் இணையதளம் மூலம் மட்டுமே இந்த இயந்திரத்தை வாங்க முடியும்.
குர்குரே பேக்கிங் மெஷின்
இந்த இயந்திரம் கொண்டுதான் தயார் செய்த குர்குரேவை பேக்கிங் செய்ய முடியும், இந்த இயந்திரத்தின் விலை தற்போது 2,50,000/-ரூபாய்க்கு இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது அடுத்து உற்பத்தி செலவு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
இதற்கு தேவையான முதலீடு
இந்த தொழிலில் முதலீடு பொருத்தவரை இயந்திரங்களை வாங்குவதுதான் அதிகமான முதலீடு அதாவது இயந்திரங்களை வாங்குவதற்கு குறைந்தபட்சம் 6 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.
உற்பத்தி செலவுகள் முறை
குறைந்தபட்சம் ஒரு கிலோ குர்குரே தயாரிப்பில் 25 கிராம் பேக்கிங் செய்யும் பொழுது 97 ரூபாய் உற்பத்தி செலவு ஆகிறது அதன் விவரங்கள் இப்போது முழுமையாக பார்க்கலாம்.
மூலப்பொருட்களின் விலை தோராயமாக
மூலப்பொருட்கள் – 22 ரூ
சமையல் எண்ணெய் -45ரூ
பேக்கிங் செய்வதற்கு -20ரூ
மின்சாரம் மற்றும் இதர செலவுகளுக்கு -15ரூ
இவை அனைத்தையும் கூட்டினால் ஒரு கிலோ தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 97 ரூபாய் உற்பத்தி செலவாகும் உற்பத்தி பொருத்தவரை ஒரு நிமிடத்தில் 25 கிராம் எடையுள்ள 40 குர்குரேபாக்கெட்களை தயார் செய்து கொள்ள முடியும்.
விற்பனை வியாபாரம் முழு விவரம்
இவ்வாறு தயார் செய்த குர்குரே சிறிய பாக்கெட்டுகளை சந்தையில் குறைந்த பட்சம் 4 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் ஒரு பாக்கெட் விலை 4 ரூபாய் என்றால் 4X40=160 வருமானம் கிடைக்கும்.
இவற்றில் மார்க்கெட்டின் மற்றும் இதர செலவுகள் போக ஒரு கிலோ குர்குரே தயாரிப்பில் நமக்கு ஒரு நிமிடத்திற்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும் தோராயமாக.
ஒரு மணி நேரம் குர்குரே தயாரிக்கும் பொழுது 50×60=3,000/- ரூபாய் லாபம் கிடைக்கும்.
அதுவே ஒரு நாள் 8 மணி நேரம் நீங்கள் தொடர்ந்து குர்குரே தயாரித்தால் 30000X8=24,000/- லாபம் கிடைக்கும்.
செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
குர்குரே தயாரிப்பில் ஒரு மாதத்திற்கு தோராயமாக 7,20,000,ரூபாய் லாபம் கிடைக்கும்.
10 amazing benefits of cinnamon water in tamil
சந்தை வாய்ப்பு
சிறிய மளிகை கடை, பெட்டி கடை, பல்பொருள் அங்கன்வாடி, பள்ளி, கல்லூரி, அரசாங்க அலுவலகம், பேருந்து நிலையம், உள்ளிட்ட இடங்களில் நீங்கள் தயாரித்து விற்பனை செய்யலாம்.