கொரோனா வைரஸ்க்கு எதிராக செயல்படும் பாம்பின் விஷயம் பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு(Snake venom action against corona virus 2021)
ஜரராகசு என்று அழைக்கப்படும் ஒரு வகை பாம்பின் விஷயம் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தக் கூடிய திறன் கொண்டதாக பிரேசில் விஞ்ஞானிகள் புதிய ஆய்வில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இது கொரோனா 75% அளவைக் கட்டுப்படுத்துவதாக முதல்கட்ட மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் என்னும் நோய் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்தது, இப்பொழுதும் சில நாடுகள் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
இதுவரை உலகம் கண்ட உயிர்க்கொல்லி நோய்களின் தாக்கத்தை மிஞ்சும் அளவிற்கு இந்த கொரோனா வைரஸ் செயல்திறன் இருப்பதாக காணப்படுகிறது.
இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சிக்கலான காரியமாக உள்ளது ஏனெனில் இந்த கொரோனா வைரஸ் மிக விரைவாக உருமாற்றம் அடைந்து வருகிறது, இது உலக விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய ஒரு சவாலாகவே உள்ளது.
இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை மீறி அதிக அளவிலான பாதிப்புகளை உருவாக்கி உலக நாடுகளுக்கு மிகப்பெரிய ஒரு தலைவலியை கொடுத்து கொண்டிருக்கிறது இந்த வைரஸ்.
இந்த வைரஸ் மீதான ஆய்வுகள் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளும் இந்த கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசிகளை மக்களுக்கு செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த மாதம் வெளியிடப்பட்ட ‘Molecules’ அறிவியல் மாத இதழான ஜரராகசு என்று அழைக்கப்படக்கூடிய பாம்பின் விஷம் உருவாக்கிய மூலக்கூறுகள் குரங்கின் செல்களில் வைரஸின் 75% செயல் திறனை கட்டுப்படுத்துகிறது என செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விஷத்தில் உள்ள மூலக்கூறுகள் குரங்கின் செல்களில் இருக்கும் கொரோனா வைரஸ் இனப்பெருக்கத்தை தடுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தும் விஷத்தில் வைரஸை எதிர்த்து போராடுவதற்கு ஒரு முதல்படியாக நம்பப்படுகிறது.
பாம்பின் விஷயத்தில் இருக்கும் முக்கியமான மூலக்கூறுகள் கொரோனா பரவுவதை தடுக்க முடிந்தது என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
Click here to view our YouTube channel
PLPro எனப்படும் மூலக்கூற்றை கொரோனா வைரஸ் நோய் உடன் இணைக்க முடியும். இது மற்ற உயிரணுக்களை சேதப்படுத்தாமல் வைரஸின் இனப்பெருக்கத்தை குறைக்கிறது மற்றும் தடுக்கிறது என முதல் கட்ட ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளார்கள்.
lose weight without dieting habits best 6 tips
இந்த பாம்பின் விஷயத்தை எடுப்பதற்கு அவற்றை வளர்க்க தேவையில்லை என்றும் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்,
மூலக்கூறுகளின் வெவ்வேறு, அளவுகளில், செயல்திறனை ,மதிப்பீடு செய்து,வைரஸ் உயிரணுக்களில் நுழைவதை முழுவதும் தடுக்க முடியுமா என அடுத்த கட்ட ஆராய்ச்சி நடக்கும் என தெரிவித்துள்ளார்கள்.