வந்துவிட்டது எலக்ட்ரிக் டிராக்டர் இந்த புதிய முயற்ச்சியால் விவசாயிகளுக்கு ஏற்படும் புதிய நன்மைகள் என்ன ?(sonalika tiger electric tractor price 2021)
உலகில் இன்னும் குறைந்த ஆண்டுகளில் எரிபொருள் சக்திக்கு மாற்று சக்கி தேவைபடும் இதனைக் கருத்தில் கொண்டு பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தக்கட்ட முயற்ச்சிக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
ஆண்டுதோறும். மக்கள் தொகை பெருக்கத்திற்க்கு ஏற்ப உணவு உற்பத்தினை அதிகரிக்க வேண்டிய காட்டாயத்தில் உள்ளது உலக நாடுகள் மற்றும் விவசாயத்திற்க்கு புதுமையை புகுத்தி. இயற்க்கையான முறையில் மகசூலை அதிகரிக்க வேண்டும்.
இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்க்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்ச்சிகளை எடுக்கிறது.
முதல் எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகம்.
இதுவரை யாருமே செய்யாத புதிய முயற்ச்சியோ முன்னணி நிறுவனம் ஒன்று செய்துள்ளது.அந்த வகையில் முதல் எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தேசிய விவசாயி தினத்தன்று.சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் டிராக்டர்(Sonalika Tiger Electric Tractor).இதன் ஆரம்ப விலை ரூபாய் 5.99 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதில் பல புதுமையான நவீன வசதிகளைப் புகுத்தி உள்ளது இந்த நிறுவனம்.கார்கள், பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் பயன்பாட்டிற்க்கு வரவுள்ள நிலையில் இப்பொழுது டிராக்டரும் இணைந்துள்ளது.
சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் டிராக்டர் விவரக்குறிப்புகள்(Sonalika Tiger Electric Tractor Specifications)
இந்த புதிய எலக்ட்ரிக் டிராக்டரில் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் இதனுள் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் வடிவமைக்கப்பட்டுள்ளது மின்சாரக் டிராக்டரில் அதிகபட்சமாக மணிக்கு 24.93 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இந்த டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ள IP67 சான்றிதழ் பெற்ற 25.5KW பேட்டரி மிகச் சிறப்பான மற்றும் அதிக செயல் திறனை வெளிப்படுத்துகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 2 டன் எடையை டிராலியுடன் எட்டு மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம். சாதாரணமாக சார்ஜ் 3 பின் 15-amp மூலம் 10 மணி நேரத்திலும், பாஸ்ட் சார்ஜ் என இரு அம்சங்களை வழங்கி உள்ளது. மிகவும் விரிவான சார்ஜ் மூலம் 4 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.
இந்த மின்சார டிராக்டரை டீசல் இன்ஜின் டிராக்டர் உடன் ஒப்பிடுகையில் 75% குறைவான கட்டணத்தில் இவற்றை இயக்க முடியும். மேலும் டீசல் டிராக்டரின் முறுக்குவிசைக்கு (Torque) இணையாக இந்த மின்சார டிராக்டர் முறுக்குவிசைக்கு (Torque) வழங்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முதல் 10 உணவு வகைகள்.!!!
சோனாலிகா குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது என்ன.
சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி இயற்கையான முறையில் மகசூலை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையில் இந்த எலக்ட்ரிக்கல் டிராக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சோனாலிகா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராமன் மிட்டல் தெரிவித்தார்.