Sri lanka economic crisis refugees 2022

Sri lanka economic crisis refugees 2022

சாப்பாடு இல்லை குழந்தைக்கு பால் கூட இல்லை தனுஷ்கோடிக்கு அகதிகளாக வரும் மக்கள்..!

இலங்கையில் நிலவும் கடுமையான பஞ்சம் காரணமாக அந்த நாட்டைச் சேர்ந்த சிலர் தனுஷ்கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர், இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 264.4 என்ற அளவிற்கு சரிந்துள்ளது.

அந்த நாட்டு வரலாற்றில் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய மதிப்பீட்டில் 207 ரூபாயாக உள்ளது, சில இடங்களில் 250 ரூபாயை தாண்டி விற்கப்படுகிறது, ஒரு லிட்டர் டீசல் விலை 159 ரூபாயாக உள்ளது.

Sri lanka economic crisis refugees 2022

இலங்கை பொருளாதார நிலைப்பாடு என்ன

இதனால் ஒரே வாரத்தில் இரண்டு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை உதவி கேட்டு உள்ளது, அதேபோல் இலங்கையில் கடுமையான மின்சார தடை இருக்கிறது.

எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களும் விலை அங்கே வரலாறு காணாத அளவில் உயர்ந்துவிட்டது, இலங்கையில் ஒரு கிலோ சம்பா அரிசி விலை 210 ரூபாயாக உள்ளது.

அதேபோல் ஒரு கிலோ துவரம் பருப்பு விலை 380 ரூபாய், ஒரு கிலோ கோழிக்கறி ரூபாய் 1000, முட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் கேஸ் சிலிண்டர் வாங்க மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நிற்கும் அவலம் இருக்கிறது.

இந்த அவலம் காரணமாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி எனப்படும் கட்சி அங்கு போராட்டம் நடத்திவருகிறது, பல்லாயிரக்கணக்கான மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும்

இந்த நிலையில்தான் இலங்கையில் நிகழும் கடுமையான பஞ்சம் காரணமாக அந்த நாட்டைச் சேர்ந்த சிலர் தனுஷ்கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்துள்ளனர்.

இந்தியா இலங்கை இடையே 13 மணல்திட்டு உள்ள பகுதியில் இந்த இன்று கடலோர காவல் படையினர் ரோந்து பணிகளை செய்து வந்தனர்.

அப்போது தனுஷ்கோடி மூன்றாம் மணல்திட்டு பகுதியில் 2 பெண்கள் 1 கைக்குழந்தை 2 சிறுவர்கள் 1 ஆண் உட்பட 6 நபர்கள் அங்கு வந்து கொண்டிருப்பதைக் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களை உடனே கடலோர காவல் படையினர் மீட்டு கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Sri lanka economic crisis refugees 2022

தொடரும் விசாரணைகள்

இவர்களிடம் கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் பஞ்சம் காரணமாக இவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை, உணவும் கிடைக்கவில்லை, குழந்தைக்கு பால் கூட கிடைக்கவில்லை.

விலைவாசி அதிகமாகிவிட்டது, வேலையும் இல்லை, தமிழ்நாட்டிற்கு வந்தால் தப்பித்துக்கொள்ளலாம் இங்கே ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று நம்பி வந்தோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் இவர்கள் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அல்லது சிங்களர்களால என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது தமிழ்நாடு வந்த இவர்களுக்கு முதலில் உணவு கொடுக்கப்பட்டது கைக் குழந்தைக்கு பால் தரப்பட்டது.

இலங்கையில் நிலவும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் இருக்கும் மேலும் பல தமிழ்நாடு நோக்கி வர வாய்ப்பு உள்ளதாக.

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும்..!

உளவுத்துறைக்கும் மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளில் இருந்து பலர் இங்கே.

Jan dhan yojana scheme full details 2022

சில நாட்களில் வரலாம் என்று போலீசாருக்கு தகவல் வந்துள்ளது இதனால்ரோந்து பணிகளை கடலோர காவல்படையும் உளவுத்துறையும் இப்பொழுது அதிகரித்துள்ளது.

Leave a Comment