Srivilliputhur Andal Temple Best tips 2023
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மிகப்பெரிய இந்து கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் திருக்கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம்.
முக்கியமாக வைணவ திவ்ய தேசங்களில் 108 திவ்ய தேசங்களில் முக்கியமாக அமைந்துள்ளது, இந்த திருக்கோவில் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.
முதல் பகுதியில் வடபத்ரசாயி பெருமாள் கோவில் உள்ளது, இவருக்கு தான் ஆண்டாள் தன் மாலையைச் சூடிக் கொடுத்தாள் என்று குருபரம்பரை நூல்கள் தெரிவிக்கிறது.
இங்கு அமைந்துள்ள கோபுரம் 196 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது, தமிழகத்தின் இழைச்சி,தமிழகத்தின் சின்னமாக ராஜகோபுரம் முத்திரை இடம்பெற்றுள்ளது.
இதற்காக தனி சிறப்பு கோவிலின் இரண்டாம் பகுதி ஆண்டாள் சந்நிதி இங்குள்ள கல்வெட்டுகளில் சூடிக்கொடுத்த நாச்சியார் கோவில் என பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்த கோவிலில் உற்சவர் ஆண்டாள் சுத்தப்படுத்தும் மாலையில் கிளி அணிவிக்கப்படுகிறது, இந்தக் கிளியை உருவாக்குவதற்கு ஒரு வம்ச வழியினர் தனியாக இருக்கிறார்கள்.
மரவள்ளிக்கிழங்கு இலைகள்,மாதுளம் பூக்கள் இவற்றைக்கொண்டு தினம்தோறும் திரு ஆண்டாளுக்கு கிளியை செய்துவருகிறார்கள், மாலையை அணிந்து ஆண்டாளுக்கு அழகு பார்த்ததாக கூறப்படும் கண்ணாடி கிணறு இன்று உண்டியல் ஆக மாற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் கிபி 765 ஆம் ஆண்டு முதல் 815 ஆண்டுகளில் ஸ்ரீவல்லவதேவ மன்னரால் கட்டப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கிறது.
கிபி 815 நூற்றாண்டுகளில் மாவேலி என்பவர் இந்த கோவிலை புதுப்பித்து விரிவுபடுத்தியும் திருப்பணிகள் செய்தார் என வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பற்றிய சில தகவல்கள்
Srivilliputhur Andal Temple Best tips 2023 பண்டைய காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியில் இருந்தது என வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கிறது.
இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளார்கள் ஒருநாள் அவர்கள் காட்டில் வேட்டையாடி போது கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார்.
Srivilliputhur Andal Temple Best tips 2023 இந்த உண்மை தெரியாமல் வில்லி அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார் வெகுநேரம் அடர்ந்த காட்டில் தேடிய பின்னர் களைத்துப் போய் சிறிது நேரம் தூங்கினார்.
அவரது கனவில் கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை எடுத்துரைத்தார் உண்மை புரிந்ததும் தெய்வீக உத்தரவின் பேரில்.
வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைத்து ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது.
இந்த காரணத்திற்காக தான் இந்த நகரம் ஸ்ரீவில்லிபுத்தூர் என பெயர் பெற்றது என வரலாற்று ஆவணங்களும்,வரலாற்று நூல்களும், புராணம் தெரிவிக்கிறது.
Srivilliputhur Andal Temple Best tips 2023 இந்த இடத்தில் தான் ஆண்டாள் பிறந்து வளர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது பெரியாழ்வாரின் மகளாக பிறந்த ஆண்டாள் பெருமாளுக்கு சாற்றப்படும் பூவை அவள் ஒவ்வொரு முறையும் அவள் தலையில் வைத்து அழகு பார்த்த பின்பு கொடுத்திருக்கிறாள்.
இதனை அறியாத பெரியாழ்வார் பெருமாளுக்கு பூவை சூடி இருக்கிறார்.
ஒரு முறை பூவின் தலை முடி இருப்பதை கண்டுபிடித்த பெரியாழ்வார் பயந்து அதை தவிர்த்து வேறு ஒரு பூவை சூட்டினார் உடனே இறைவன் ஆண்டாள் கூந்தலில் சூடிய பூவை நான் விரும்புகிறேன்.
அதையே எனக்கு சூட்டு என்றார் இன்றளவும் ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலை மறுநாள் காலையில் வடபெருங்கோவில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.
இந்தத் திருக்கோயிலை வணங்குவதால் என்ன பலன் கிடைக்கிறது
Srivilliputhur Andal Temple Best tips 2023 திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியறிவு, வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்க, உங்களது வியாபாரம் செழிக்க, இந்த திருத்தலத்திற்கு சென்று மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.
மதுரையிலிருந்து 74 கிலோ மீட்டர் தூரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் இந்த கோவிலில் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்றால் தனி மதிப்பு இன்றும் இந்த பால்கோவா உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தரிசன நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் 8 மணி வரை
முகவரி
ஆண்டாள் மிகு ஆண்டாள் திருக்கோவில்,
ஸ்ரீவில்லிபுத்தூர் 626 125
விருதுநகர் மாவட்டம்.