svamitva scheme launched 2020 in India

இந்தத் திட்டம் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா(svamitva scheme launched 2020 in India)

கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாயத்துராஜ் தினத்தன்று மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. அது இந்தியா முழுவதும்  கிராமங்களில் உள்ள வீடுகள் நிலங்கள் தொடர்பான அதிக பூர்வமான விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை. இதனால் கிராமப்புறங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது இதற்கு தீர்வு காணும் விதமாக ‘ஸ்வமித்வா’ (SVAMITVA) என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.

கிராமங்களில் சொந்தமாக நிலம் வீடு வைத்திருப்போருக்கு சொத்து விவர அட்டை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரணம் வழங்கவும் சட்ட சிக்கல்களை தீர்க்கவும் சொத்துக்களால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கவும் பெரிது உதவும் என்று நம்பப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் உரிமையாளர்கள் எளிதாக வங்கிகளில் விவசாயக் கடன்கள் பெற முடியும் கூடவே மானியம் நேரடியாக விவசாயம் செய்யும் நபரை சென்றடையும். சொத்து தகராறு வழக்குகள் பலவருடங்கள் நீதிமன்றத்தில்  நடைபெறும் நிலைமை தவிர்க்கப்பட்டு உரியவருக்கு உடனடி தீர்வு ஏற்படும்.

விவசாயம் செய்யும் நபர்களுக்கு நன்மை கிடைக்குமா.

svamitva scheme launched 2020 India

தமிழ்நாட்டில் 2000 ஆண்டுக்குப் பிறகு நில அபகரிப்பு வழக்கு அதிகமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது. மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 2011 ஆட்சிக்கு வந்த பிறகு சட்டசபை வளாகத்தில் விவசாய ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தார் அவரை விசாரித்தபோது அவருடைய சொத்துக்கள் சில நபர்களால் அபகரிக்கப்பட்ட தெரியவந்தது. மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு நேரடியாக கோரிக்கை வைத்தார் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

விவசாயிகளை மிரட்டி விளை நிலங்களை பிடுங்குவது நிலங்களில் இருக்கும் பயிர்களை நாசபடுத்துவது சிட்டா பட்டா  போன்ற சான்றிதழில் மோசடி செய்வது போன்றவைகள் இதன் மூலம் மேலும் குறைந்து விடும்.

Reliance jio Huge Recruitment 2020

பெண் பிள்ளைகளுக்கு உரிய நிலங்களை வழங்காமல் இருப்பது மற்றும் சொத்து சேர்க்கும் நபர்களுக்கு நிலங்கள் பாதுகாப்பாக இருக்கும் இதன் மூலம்.

தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

svamitva scheme launched 2020 India

சொத்துக்கள் ட்ரோன்  தொழில்நுட்பம் மூலம் அளக்கப்பட்டு ஆதார் போன்ற கார்டு உரிமையாளர்களிடம் வழங்கப்படும்.

அரசாங்க நிலங்கள், காடுகள், மலைகளில் குடியேற்றம் போன்ற இடங்களில் நிலா ஆக்கிரமிப்பு முற்றிலும் காணாமல் போய்விடும்twitter

Leave a Comment