Strong condemnation of freebies election 2022
தேர்தலின் போது தொடர்கதையாகும் இலவசங்கள் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை தடுக்க உரிய நிலைப்பாட்டை எடுப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம் என உச்ச நீதிமன்றம் சரியான கேள்வி எழுப்பி உள்ளது.
ஓட்டுகளை பெற அரசு பணத்தில் இலவச பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது.
இதை தடுத்து நிறுத்த கோரியும் அவ்வாறு வெளியிடும் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இலவசங்கள் தொடர்கதை
இலவசங்கள் தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி என்வி ரமண தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போதே நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்பியுமான கபில் சிபலின் கருத்தை அமர்வு நீதிமன்றம் கேட்டது.
இதற்கு கபில் சிபில் கூறியது இந்த விவகாரத்தில் நிதி கமிஷன் தான் தலையிட முடியும்.
மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கும் போது அந்த மாநிலத்தின் மொத்த கடன் எவ்வளவு, எந்த அளவுக்கு இலவச பொருட்கள் வழங்க முடியும், என்பது குறித்து நிதி கமிஷன் கேள்வி கேட்க முடியும் என அவர் விளக்கினார்.
இதையடுத்து அமர்வு நீதிமன்றம் தன் உத்தரவில் கூறியுள்ளது இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
Strong condemnation of freebies election 2022 ஆனால் ஒரு நிலைப்பாட்டை எடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன் இதை ஒரு முக்கிய பிரச்சனையாக அரசு கருதவில்லை இலவச அறிவிப்புகள் தொடர வேண்டுமா, வேண்டாமா, உங்களுடைய பதிலை தாக்கல் செய்யுங்கள்.
இந்த விவகாரத்தில் நிதி கமிஷனின் கருத்தை கேட்கலாமா என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் இலவசங்கள் தருகிறோம் என்று அறிவிப்பு இன்றுவரை தொடர்கதையாகி உள்ளது, இதற்கு பதிலாக பல நலத்திட்டங்கள் உள்ளது.
வேலைவாய்ப்பை ஏற்படுத்த கூடிய திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள், நீர் வளத்தை பாதுகாக்கும் திட்டங்கள், என பல்வேறு வகையான நன்மைகள் தரும் திட்டங்கள் இருக்கும் போது.
Strong condemnation of freebies election 2022 மக்களின் ஆசைகளை தூண்டி ஏன் இலவசங்களை அறிவித்து நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு பொருளாதார இழப்பை அரசியல் கட்சிகள் ஏற்படுத்துகிறது, இலவசங்கள் ஒரு சாபக்கேடு என உச்ச நீதிமன்றம் தன் கருத்தை தெரிவித்துள்ளது.
தமிழகம் முதலிடம்
Strong condemnation of freebies election 2022 தமிழகத்திற்கு வரும் வருவாயில் 37% தமிழக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள இலவசங்களுக்கு செல்கிறது, இந்தியாவில் தமிழகம் தான் அதிக கடன் சுமையில் இருக்கும் மாநிலம்.
தமிழகம் மத்திய அரசுடன் இணைந்து உள்ளதால் அதனுடைய பாதிப்புகள் தெரியவே இல்லை.
ஒருவேளை எதிர்காலத்தில் இதனுடைய பாதிப்புகள் கட்டாயம் தமிழக மக்களை பாதிக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் என்பது, திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ளது.