சுகன்யா சம்ரிதி யோஜனா 2020 தமிழில் (Sukanya Samriddhi Yojana Benefits 2020)
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் நலனுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் கணக்கைத் தொடங்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கின் காலம் 21 ஆண்டுகள் அல்லது பெண் குழந்தையின் 18 வயது முதல் திருமணம் வரை ஆண்டுதோறும் 7.6% வட்டி விகிதம் அளிக்கப்படும் இந்திய நிதி அமைச்சகத்தால்.
ஒரு குடும்பத்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம் மேலும் ஒரே நேரத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளுக்கும் கணக்கை தொடங்கும் வசதி உள்ளது.
சுகன்யா சம்ரிதி யோஜனாவின் முக்கிய அம்சங்கள்.
இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூபாய் 250 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து நீங்கள் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டம் முதிர்வடையும் வரை வட்டி சம்பாதித்து கொடுக்கும் மற்றும் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை இந்திய நிதி அமைச்சகத்தால் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட பெண் குழந்தை துரதிஸ்டவசமாக இறந்துவிட்டாள் அதற்கான சான்றிதழ்களை பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் கணக்கு தொடங்கிய வங்கி அல்லது தபால் நிலையங்களில் கொடுத்து இறுதிவரை செலுத்தப்பட்ட பணத்தை வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
கணக்கை தொடர முடியா விட்டால் அதற்கான காரணத்தை உரிய அதிகாரியிடம் எடுத்துக்கூறி கணக்கை மூடிவிடலாம் மேலும் செலுத்தப்பட்ட பணத்தை 21 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியா முழுவதும் மாற்றிக்கொள்ளலாம்.
இந்தியாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இந்த கணக்கை மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் கணக்கு தொடங்கிய வங்கி அல்லது தபால் நிலையங்களில் சென்று அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் பெற முடியும்.
இந்த திட்டத்தின் மூலம் வங்கியில் கடன் பெற முடியும்.
18 வயது நிரம்பிய பெண் கல்வி செலவிற்காக 50 சதவீத பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
1961 ஆம் ஆண்டு பிரிவு 80 சி இன் படி இந்த திட்டத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட அசல், வட்டி முதிர்வு தொகைக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 1.50 ரூபாய் வரை வட்டி விகிதத்தில் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் இணைவது எப்படி.
இந்த திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் கேஒய்சி போன்ற சான்றிதழ்கள் தேவை.
உங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் (SBI,PNB,BoB) etc…. போன்ற வங்கிகளில் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைந்து கொள்ளலாம்.
Ayushman Bharat Yojana 2020 details in Tamil
சில தனியார் துறை வங்கிகளையும் அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு அனுமதித்துள்ளது (ICICI,AXIS,HDFC BANKS)…
SSY கணக்கில் உள்ள நிதியை எவ்வாறு பார்ப்பது.
நீங்கள் தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருந்தால் நேரடியாக சென்று சேமிப்பு அட்டையில் இருப்புத் தொகையை பதிவேற்றலாம்.
வங்கிகளில் வழங்கும் இணையதள வசதி மூலம் இருப்புத் தொகையை தெரிந்துகொள்ளலாம். மேலும் இலவச நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து மற்றும் நேரடியாக சென்று சேமிப்பு அட்டையில் இருப்புத் தொகையை பதிவேற்றலாம். twitter