sukran peyarchi palan best tips in tamil 2023
சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2023 கும்பத்தில் சனி பகவானுடன் இணைந்து மகாலட்சுமி தரும் அதிர்ஷ்ட யோகம் யாருக்கு..!
மகர ராசியில் சூரியனுடன் குடியிருக்கும் சுக்கிரன் ஜனவரி 22ஆம் தேதி 2023 ஞாயிற்றுக்கிழமை முதல் கும்ப ராசியில் சனியுடன் சேரப்போகிறார்.
கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும்.
சுக்கிரன் காலாதிகாரன் இல்லறவாழ்வு உரியவர் சனியுடன் கூட்டணி சேரும் சுக்கிரன் சிலருக்கு மகாலட்சுமி யோகத்தை கொடுப்பார்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது, என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சுக்கிர பகவான் சிற்றின்பம் திருமணம் முதலான சுகத்தை கொடுப்பவர், அதேபோல் பெண்களுக்கு நளினத் தன்மையும் அழகான தோற்றம்.
கவர்ச்சியான, வீரிய சக்தி, அறிவாற்றல், மனத்தூய்மை, கணவனை அடையும் தகுதியும், சுகபோகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் கொடுப்பவர்.
சுக்கிரர் என்றால் இன்பம் மனித வாழ்க்கை அன்பு, பாசம், காதல், ஆகிய மூன்று இன்பங்களை கொடுக்கக்கூடியவர் சுக்கிரன் சுக போகங்களில் அதிபதி.
சுக்கிரன் மனைவி யோகம் தருபவருக்கு மனைவியைப் பற்றியும், பெண்ணுக்கு மணவாழ்க்கையும்,சில புரிதல்களை பற்றியும் கொடுப்பவர்.
ஆகையால் சுக்கிரன் நமது ஜாதகத்தில் கட்டத்தில் நல்ல யோக பலத்துடன் இருப்பது மிக அவசியம் காலமான 20 வருடங்களில் மிகப் பெரிய ராஜ யோக பலன்கள் கிடைக்கும்.
ஒரு நபரின் ஜாதகத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் அது மிகப் பெரிய கோடீஸ்வரர் யோகம் அமைந்து விடும்.
யோகமாக வசதியான மனைவி அமைவார், நன்றாக சம்பாதிக்கும் மனைவி அமைவார், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 7வது வீட்டில் சுக்கிரன் சனி சேர்க்கை கண்டிப்பாக இருதரப்பு யோகத்தையும் கொடுக்கும்.
சிலருக்கு கலப்பு திருமணம் நடைபெறும், இந்த சுக்கிர பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கிறது, என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மேஷ ராசி
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சனியுடன் இணைந்து பயணம் செய்கிறார்,மகாலட்சுமி யோகம் உங்களுக்கு தேடி வரப்போகிறது.
பணவரவு திடீரென்று அதிகரிக்கும், திருமண வாழ்க்கையில் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் மகிழ்ச்சி பொங்கும், பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வீடு தேடி வரும்.
வீடு நிலம் வாகனம் வாங்குவதில் பல ஆதாயங்கள் கிடைக்கும், அரசனுக்கு இணையான வாழ்க்கை ஏற்படும்.
திருமண தம்பதிகள் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்,வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நன்மைகள் மென்மேலும் அதிகரிக்கும்.
ரிஷப ராசி
உங்கள் ராசிக்கு 10-வது வீடான தொழில் ஸ்தானத்தில் சுக்கிர பகவான் அமர போவதால் உங்கள் வேலையில் தொழிலிலும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
வேலை செய்யுமிடத்தில் வார்த்தைகளில் மிக மிக கவனம் தேவை, குடும்பத்தில் மனைவியுடன் அல்லது உங்கள் பெண் தோழியுடன் சின்ன சின்ன ஊடல்கள் அவ்வப்போது ஏற்படலாம்.
திடீரென்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எப்பொழுது பேசாமல் அமைதியாக யோசித்து பேசவும்.
முக்கியமாக உங்களுடைய பணத்தை மிக பத்திரமாக கையாளுங்கள்.
பெண்களுக்கு நகை சேர்க்கை ஏற்படும், வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கி கொடுத்தால் அதிக நன்மைகள் ஏற்படும்.
மிதுனம் ராசி
உங்கள் ராசிக்கு சுக்கிர பகவான் 9வது வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்கிறார், வீட்டில் மனைவியின் அன்பு அதிக அளவில் கிடைக்கும்.
காதலி நண்பர்கள் உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலமிது, காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும்.
வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும், வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று ஆண்டாள் தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.
கடகம் ராசி
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 8ம் இடத்தில் சுக்கிர பகவான் மறைகிறார்,ஏற்கனவே அஷ்டமத்து சனி உங்களை ஆட்டிப்படைக்கிறது.
கூடவே சுக்கிரபகவான் இணைவதால் மனைவியின் உடல் நலத்திற்கு அக்கறை கண்டிப்பாக நீங்கள் எடுக்க வேண்டும்.
இருவரும் மிக கவனமாக இருக்க வேண்டும், பணம், பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம்.
மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், உங்களுடைய பொருட்கள், இரண்டு சக்கர வாகனம், நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
வெள்ளிக்கிழமை காய்ச்சிய பாலுடன் ஏலக்காய் சேர்த்து நைவேத்தியம் செய்து வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
சிம்மம் ராசி
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் சனி பகவானுடன் இணைந்து பயணம் செய்யப்போவதால் வாழ்க்கைத்துணையுடன் காதல் உணர்வுகள் திடீரென்று அதிகரிக்கும்.
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும், சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடிய வாய்ப்புகள் இருக்கிறது.
தொழில் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும், சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும்.
பெண்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும், சுக்கிரன் அருட்பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் தீபம் ஏற்றி வழிபடலாம்.
கன்னி ராசி
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் நீங்கள் பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்.
sukran peyarchi palan best tips in tamil 2023 வீட்டில் வாழ்க்கைத் துணையினால் சின்ன சின்ன சச்சரவுகள் ஏற்படும், அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும், வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமாக இது இருக்கும்.
எதிரிகளால் ஏற்படும் பிரச்சினை முடிவுக்கு வரும், வெள்ளிக்கிழமை அம்பிகை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
துலாம் ராசி
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5வது வீடான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சனியுடன் இணைகிறார் பிள்ளைகளால் வாழ்க்கையில் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
நல்ல வேலை கிடைக்கும் வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும்.
மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும்.
வீட்டில் மனைவி குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும், வாழ்க்கைத்துணை உங்கள் மீது காதல் மழை பொழியும், வெள்ளிக்கிழமை ஆலயம் சென்று அம்மன் கோவில்களில் விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.
விருச்சிக ராசி
sukran peyarchi palan best tips in tamil 2023 சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் பயணம் செய்கிறார் சுகஸ்தான சுக்கிரன் நல்ல சுகங்களை கொடுக்க போகிறார்,பெண்கள் நகை, ஆடை, ஆபரணம், வாங்குவீர்கள்.
பெண்கள் வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை வாங்குவீர்கள், சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள்.
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிக அவசியம், வண்டி வாகனம் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும், சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபமேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசு ராசி
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3ம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சனியுடன் இணைகிறார், இளைய சகோதரர் வீட்டு விசேசங்களில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
sukran peyarchi palan best tips in tamil 2023 முகத்தில் பொலிவு கூடும், முயற்சிகளில் வெற்றி கைமேல் கிடைக்கும் திடீரென்று உங்களுடைய நட்பு வட்டாரம் அதிகரிக்கும், சிறிய ஆன்மீக பயணம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
உடல்நல சின்னச்சின்ன தீமைகள் ஏற்படும்,மிக கவனம் தேவை, வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
மகர ராசி
sukran peyarchi palan best tips in tamil 2023 உங்கள் ராசியில் சூரியனுடன் சஞ்சாரம் செய்து வந்த சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் சனியுடன் பயணம் செய்யப் போகிறார்.
தனஸ்தானம் சுக்கிரனால் உங்களுக்கு பணம் வருமானம் அதிகரிக்கும், மகாலட்சுமி யோகம் கைகூடி வரும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
கணவன்-மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் பல மடங்கு அதிகரிக்கும், திருமண வயதில் இருக்கும் நபர்களுக்கு திருமணம் ஏற்பட வேண்டிய சூழ்நிலை நடைபெறும்.
குழந்தை பாக்கியத்திற்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி வழிபட வேண்டும்.
கும்பம் ராசி
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் சனியுடன் கூடி வருவதால் வேலையில் புதிய பலன்கிடைக்கும், நல்ல வருமானம் வரும், பொன்னும் பொருளும் சேர்க்கை நடைபெறும்.
sukran peyarchi palan best tips in tamil 2023 தங்க நகைகள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும், கணவன் மனைவி இடையே காதல் உணர்வு அதிகரிக்கும்.
சிலருக்கு வயிற்றில் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் உணவுகளில் மிக கவனம் தேவை, வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
மீன ராசி
உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சுக்ரன் உங்கள் ராசிநாதன் உடன் கூட்டணி அமைத்து குடியேறியுள்ளார் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
கணவன் மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்கள் வாழ்க்கைத்துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும்.
பணவரவு சிலருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும், சுப விரயச் செலவுகள் ஏற்படும், வீட்டிற்கு தேவையான சில மின்னணு பொருட்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
சிவ ஆலயத்திற்கு சென்று தயிரும் சர்க்கரையும் வாங்கி கொடுத்து வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.