இன்றைய இளைஞர்களுக்கான சிறந்த 7 முதலீடு திட்டங்கள். யார் யாருக்கு என்னென்ன திட்டம்…!!!(Super 7 scheme for india youth in tamil )
இன்றைய தலைமுறை இளைஞர்கள் 2020ஆம் ஆண்டு சேமிப்பு மற்றும் சிறந்த முதலீட்டு திட்டங்கள் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானதாக உள்ளது என்று உணர்ந்திருப்பார்கள்.
Rich Dad Poor Dad Author Robert kiyosaki (ராபர்ட் கியோசாகி) அவர்கள் வெளியிட்ட இந்த புத்தகத்தில் இளைய தலைமுறையினர்கள் எப்படி நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார் மேலும் சேமிப்பு, மற்றும் சிறந்த முதலீட்டு திட்டங்கள் போன்றவற்றை மிக விளக்கமாக இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.
நம் வாழ்க்கையில் ஏற்படும் நிதி நெருக்கடி நிலைகளை எப்படி சமாளிப்பது என்பது பற்றி எந்த ஒரு அடிப்படை பாட புத்தகங்களும் நமது பள்ளி மற்றும் கல்லூரிகளில் இல்லை.
ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நபர் மாத கடைசியில் பணம் இல்லை என்று புலம்பும் அளவிற்கு இன்றைய இளைய தலைமுறையினர் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அரசாங்கம் விதிக்கும் வரிகளிலிருந்து நமது பணத்தை எப்படி சேமிப்பது போன்றவற்றை கீழே கொடுத்துள்ள தகவல்கள் மூலம் காணலாம்.
ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயம் வேண்டும்.
சில ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் இருக்கும் மக்கள் இரண்டு விஷயங்களுக்கு தங்களுடைய பணங்களை அதிக அளவில் செலவு செய்கிறார்கள் ஒன்று மருத்துவம் மற்றொன்று கல்வி.
அன்றாடம் நம் வாழ்க்கையில் அனாவசியமாக செலவு செய்யும் பணத்தை இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்தால் குடும்பத்தில் ஏற்படும் திடீர் மருத்துவச் செலவுகளை எளிதாக சமாளித்துவிடலாம்.
இன்றைய காலகட்டங்களில் பல ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் குறைந்த பிரீமியத்தில் சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை மக்களுக்கு வழங்குகிறது. மேலும் தனிநபர் பாலிசி, குடும்ப பாலிசி, குழந்தைகளுக்கான பாலிசி, போன்ற பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் நடைமுறைகளில் உள்ளன.
ரியல் எஸ்டேட் முதலீடு திட்டம்.
கையில் அதிக அளவில் பணம் இருந்து எந்த திட்டங்களில் முதலீடு செய்வது என்பது பற்றி தெரியாமல் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
வீழ்ச்சி என்பது இந்தத் துறையில் எப்பொழுதுமே கிடையாது மேலும் நம்ம ஊர் அரசியல்வாதிகள் முதலில் முதலீடு செய்வது இந்த திட்டத்தில் தான்.
தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
எப்போதும் சிறந்த முதலீடாகும் பாதுகாப்பு புகலிடமாகவும் இருக்கிறது. கிராமங்களில் இருக்கும் ஏழைகள் முதல் பெரிய பணக்காரர்கள் வரை அனைவருமே தங்கத்தில் தான் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள்.
தங்கம் வாங்கும் பொழுது செய்கூலி சேதாரம் போன்றவற்றுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் அதற்கு பதிலாக பேப்பர் தங்கம் என்று அழைக்கப்படும் தங்க பத்திரம், சார்ந்த பாண்டுகள், கமாட்டிட்டி சந்தை உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்யலாம்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்(National Savings Certificate)
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதலீடு செய்து 33 லட்சம் ரூபாய் வரை பணத்தை சம்பாதித்து உள்ளார் எனவே இந்த திட்டம் எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி) .2020
தேசிய ஓய்வூதிய திட்டம்.
இந்தியாவில் வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதற்கு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது
மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனிநபர்கள், ஏழைகள், பணக்காரர்கள், அனைவருமே இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் நீங்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள நபர்கள் இணைந்துகொள்ள முடியும் மேலும் இந்த திட்டத்திற்கு வரிச் சலுகை உண்டு.
தேசிய ஓய்வூதிய திட்டம் 2020 தமிழில்
பங்குச்சந்தை முதலீடு.
பங்குச் சந்தை முதலீடுகளை பொருத்தவரையில் இதில் சற்று ஆபத்து அதிகம் ஆனால் இதைப்பற்றி சரியாக தெரிந்துகொண்டு சரியான பொருளாதார ஆலோசகர் கூறும் வழியில் முதலீடு செய்தால் உங்களுக்கு நிச்சயம் பணம் கிடைக்கும்.
புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களின் பங்குகளின் விலை ஆரம்ப கட்டத்தில் குறைவாக இருக்கும் இதுபோன்ற (BLUE CHIP) கம்பெனியில் முதலீடு செய்யலாம்.
பரஸ்பர நிதி (mutual funds).
இந்த திட்டம் சந்தையுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் சற்று பாதுகாப்பு மற்றும் சிக்கலான திட்டம் என்று சொல்லுவார்கள் ஆனால் இந்தியாவில் இருக்கும் சில வங்கிகள் சந்தைகளில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் கணிசமான பணத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வழங்குகிறது.
Meswake Best health benefits 2020 in Tamil
குறிப்பாக சந்தை சார்ந்த திட்டங்கள், இன்கம் பண்டுகள், பேலன்ஸ் பண்டுகள், கில்ட் பண்டுகள், போன்றவைகளில் முதலீடு செய்யலாம். மேலும் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு இந்தத் துறையில் அனுபவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெறுவது உங்கள் பணத்திற்கு நல்லது.twitter