ஆபத்தான வெள்ளைப்பூஞ்சை தொற்றுநோயின் அறிகுறிகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு இருக்கிறது தெரிந்து கொள்ளுங்கள்.(Symptoms of white fungal infection 2021)
கொரோனா வைரஸ் தொடர்ந்து கருப்பு பூஞ்சை கொரோனா நோயாளிகள் சந்திக்கும் புதிய பிரச்சினையாக அமைந்துள்ளது இந்திய முழுவதும் தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8800 கடந்துள்ளது இதனை தொடர்ந்து மாநில அரசுகளுக்கு கருப்பு பூஞ்சை நோயை தொற்றுநோயக அறிவிக்கும்படி மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களிலிருந்து இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளது இந்தச் சூழலில் பீகார் தலைநகர் பாட்னாவில் வெள்ளை பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் இந்த நோய் கருப்பு பூஞ்சை நோய்களை விட ஆபத்தானதுயான கருதப்படுகிறது இதன் அறிகுறிகள் என்ன என்று யாரெல்லாம் இந்த நோயால் பாதிக்கப் படலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வெள்ளை பூஞ்சைத் தொற்று நோய் என்றால் என்ன?
மூக்கடைப்பு, கடுமையான வலி, முகத்தில் வீக்கம், கண்களுக்கு கீழே கருப்பு கலரில் கனதத்தன்மை, காய்ச்சல் மற்றும் தலைவலி. ஆகியவை கருப்பு பூஞ்சை அறிகுறிகள் ஆகும்.
இதுவரை அறியப்பட்டவற்றிலிருந்து ஒரு வெள்ளை பூஞ்சைத் தொற்று இயற்கையாகவே மிகவும் கடுமையானதாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் மேலும் இது பல அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.
மருத்துவர்கள் HRCT போன்ற மார்பு ஸ்கேன் செய்வதன் மூலம் மட்டுமே இந்த நோயை கண்டறிய முடியும் என்று தெரிவிக்கிறார்கள்.
இந்த வெள்ளை பூஞ்சை தொற்று உடலில் ஆபத்தானதாக மாறுவதற்கு அது முக்கிய உறுப்புகளை தாக்குகிறது சுவாச உறுப்புகள், செரிமான பாதை, சிறுநீரகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளை கூட பாதிக்கும் திறன் கொண்டது இந்த வெள்ளை பூஞ்சை தொற்று.
ஒருவரை வெள்ளை பூஞ்சை தொற்று எப்படி தாக்குகிறது.
வெள்ளை மற்றும் கருப்பு பூஞ்சை தொற்று பூஞ்சை அச்சுகளால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் அவை சூழலில் இருக்கும் மியூகோரமை சொட்டுகள் என அழைக்கப்படுகிறது.
ஒருவருக்கு எந்த ஒரு நோய் தொற்று இல்லை என்றாலும் இந்த நோய் தொற்று ஏற்படக்கூடும் ஏனெனில் இந்த பூஞ்சை தொற்றை ஒரு நபர் எளிதில் சுவாசிக்க முடியும் இது மேலும் முக்கிய உறுப்புகளுக்கு பரவி சிக்கலை ஏற்படுத்தும் அழுகிய பழம், காய்கறிகள், தாவரங்கள் மற்றும் நீர் நிலைகளில் இந்த பூஞ்சைகள் இருக்கும்.
யாரெல்லாம் இந்த நோய் தோற்றால் பாதிக்கப்படுவார்கள்.
நீரிழிவு, புற்று நோய், எச்ஐவி எய்ட்ஸ், மஞ்சள்காமாலை மற்றும் கொமொர்பிடிட்டிகள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து ஸ்டீராய்டு பயன்படுத்தப்படுகிறது மேலும் இவர்கள் தொற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்தை எதிர்கொள்ள கூடும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொற்றுநோய்க்கான கூடுதல் அபாயங்களை எதிர்கொள்கின்றனர் கருப்பு பூஞ்சைத் நோய்த்தொற்றை பொருத்தவரை இந்த அபாயங்கள் இல்லாமல் இருந்தது கருப்பு பூஞ்சை போலவே ஒரு நபர் சுகாதாரமற்ற மேற்பரப்பு தொடர்பு கொள்ளும் போது வெள்ளை பூஞ்சை பரவக் கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
குறிப்பாக அதிக நாட்கள் ஆக்ஸிஜன் ஆதரவில் உள்ள நோயாளிகளுக்கு மாசடைந்த நீர் ஆதாரங்கள் மூலம் இந்த நோய் வருவதற்காக அதிக வாய்ப்புகள் உள்ளது. இது COVID-19 மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடையே வெள்ளை பூஞ்சை தொற்று அதிகரிக்க இதுதான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
வெள்ளை பூஞ்சை தொற்று நோயின் அறிகுறிகள் என்ன.
இந்த நோய் பற்றி இதுவரை போதுமான தகவல்கள் அதிக அளவில் கிடைக்கவில்லை என்றாலும் பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் வெள்ளை பூஞ்சை, மார்பு மற்றும் நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று எனவே ஒருவருக்கு இருமல், மார்புவலி, மூச்சு திணறல், போன்ற அறிகுறிகள் இருந்தால் இது தவிர தொற்றுவீக்கம் நோய்த்தொற்றுகள் தொடர்ச்சியான தலைவலி போன்ற பல அலர்ஜி அறிகுறிகளை இந்த நோய் ஏற்படக்கூடும்.
simple 3 tips How to prevent black fungus
COVID-19 குணமடையும் நோயாளிகளுக்கு அடிப்படை நிலைமைகள் மற்றும் சிகிச்சை காரணமாக நோய் தொற்று அபாயத்தை எதிர்கொள்ளலாம்.