Tamil killed in Kuwait worst 2022
போய் ஒட்டகம் மேய் குவைத்தில் தமிழருக்கு நடந்த கொடுமை பிரேத பரிசோதனையில் காத்திருந்த அந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!
குவைத்தில் தமிழர் முத்துக்குமரன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் சடலம் இன்று அவரின் சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டுவரப்படும் என்றும் இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் லட்சுமணன் குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் உள்ளூரில் சரியாக வேலை கிடைக்கவில்லை மற்றும் அவர் செய்து வந்த வேலை ஊரடங்கு உத்தரவால் முழுவதும் பறிபோனது.
அதுமட்டுமில்லாமல் அதற்கு பிறகு சிறிய காய்கறி கடை ஒன்றை தொடங்கியுள்ளார், இதிலும் அவருக்கு போதிய வருமானம் இல்லை.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான முத்துக்குமார் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
சில ஏஜென்ட்களிடம் வெளிநாட்டில் வேலை கேட்டு உள்ளார் இதற்கிடையே ஐதராபாத்தில் உள்ள ஒரு ஏஜென்ட் மூலம் அவருக்கு குவைத்தில் வேலை கிடைத்தது.
முதலில் கேஷியர் அல்லது டிரைவர் வேலை என்று சொல்லி உள்ளார்கள்.
கடும் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமரன்
குவைத்திற்கு சென்ற பிறகுதான் முத்துக்குமரனுக்கு முழு உண்மையும் தெரிய வந்துள்ளது அங்கு ஒட்டகம் மேய்க்கிற வேலை.
அதுவும் பாலைவனத்தில் அங்கு அவருக்கு தங்குவதற்கு சரியான இடவசதி இல்லை, குடிநீர் இல்லை, மின்சார வசதி இல்லை, கழிப்பிட வசதி இல்லை, சரியாக உணவு வழங்கப்படவில்லை.
இதனால் கடும் வருத்தம் அடைந்த முத்துக்குமரன் தன் மறுபடியும் சொந்த நாட்டிற்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருடைய முதலாளி அவரை கடுமையாக தாக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அவரிடமிருந்த பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ளார்கள் சின்ன டென்ட் ஒன்றில் அவர் தங்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்கள்.
படுமோசமான இடம்
பொட்டல் பாலைவனத்தில் ஒரு சிறிய டென்ட்டில் அவர் தங்கி உள்ளார் அவருக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை அதேபோல் அவர் இருந்த இடத்தில் மின்சார வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இது தொடர்பாக தனது முதலாளியிடம் கேட்டதற்கு அவர் கோபமாக பதில் அளித்துள்ளார்.
அதோடு இரண்டு முறை அவரை மோசமாகும் தாக்கியுள்ளார் உணவு சரியாக கொடுக்காமல் படுத்தி உள்ளார்கள்.
பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்
Tamil killed in Kuwait worst 2022 இதையடுத்து மீட்கப்பட்ட முத்துக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது அதில் அவர் மரணத்திற்கு துப்பாக்கியால் சுட்டது தான் காரணம் என தெரிய வந்துள்ளது.
அதே சமயம் அவரின் உடலில் வேறு சில மோசமான காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடலில் பல இடங்களில் கம்பியால் தாக்கி உள்ளார்கள், இந்த தகவல் தெரிந்து முத்துக்குமரன் குடும்பத்தினர் கடுமையாக அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.
உடல் மீட்கப்பட்டு கொண்டுவரப்படுகிறது
Tamil killed in Kuwait worst 2022 இந்த நிலையில் அவரின் உடல் இன்று தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது சரியாக 13 நாட்களுக்கு பிறகு அவரின் உடல் தமிழ்நாடு கொண்டுவரப்படுகிறது.
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல துறை சார்பாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
வெளிநாட்டிலிருந்து உடலை கொண்டு வருவது கொஞ்சம் சிரமம் என்பதால் இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கிறது.
கைது செய்யப்பட்ட நபர்கள்
Tamil killed in Kuwait worst 2022 குவைத் அரசிடம் இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் முத்துக்குமரனை சுட்டுக்கொன்ற முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஏஜென்டிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது தமிழர்கள் அதிகம் வாழும் நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.