தமிழ்நாட்டில் இதுவரைக்கும் ஆட்சி செய்த முதலமைச்சர்களின் விவரங்கள்.( tamil nadu cm list full details 2021)
தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்த முதல்வர்களின் விவரங்கள் முழுவதும் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் இருந்து இதுவரைக்கும் 30 முதலமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் இதுவரைக்கும் இரண்டு பெண் முதலமைச்சர்கள் மட்டுமே இருந்துள்ளார்கள் அவர்களில் செல்வி ஜெயலலிதா அவர்கள் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிக ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த முதல் பெண்மணியாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 1967 முதல் 2021 வரை திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்கின்றன தமிழ்நாட்டை.
1967 ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தில் சி என் அண்ணாதுரை, டாக்டர் கலைஞர் கருணாநிதி இரண்டு நபர்கள் மட்டுமே இதுவரைக்கும் தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாக வந்துள்ளார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் டாக்டர் ராமச்சந்திரன், ஜானகி ராமச்சந்திரன் மற்றும் செல்வி ஜெயலலிதா திரு ஓ பன்னீர்செல்வம், திரு எடப்பாடி கே பழனிசாமி ஆகியவர்கள் மட்டுமே இதுவரைக்கும் முதலமைச்சராக வந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டை இதுவரைக்கும் எந்த ஒரு தேசிய பெரும் கட்சியும் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியவில்லை தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட 2 கட்சிகள் மட்டுமே தொடர்ந்து மாறி மாறி ஆட்சி செய்கின்றனர்.
இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது ஐரோப்பிய கண்டங்களின் வளர்ச்சிகளுக்கு இணையாக உள்ளது இங்கு மருத்துவம் மற்றும் கல்வி என்பது அரசாங்கத்தால் இலவசமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகிறது மேலும் இதன் தரம் ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் தமிழ்நாடு 2 இடத்தில் உள்ளது அதிகமாக வரி செலுத்தும் மாநிலமாக இருக்கிறது.
சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், ஆகிய மாவட்டங்களில் தமிழ் நாட்டின் தொழில்துறை வளர்ச்சிகளின் முதன்மையாக இருக்கின்றன.
தமிழ்நாட்டின் முதலமைச்சர்களின் பெயர் விவரங்கள்.

திரு அ சுப்பராயலு
திரு பனகல் ராஜா
டாக்டர் பி சுப்பாராயண்
திரு பி முணுசாமி நாயுடு
திரு ராமகிருஷ்ண ரங்க ராவ்,
பாபிலியின் ராஜா
திரு பி டி ராஜன்
திரு குர்மா வெங்கட ரெட்டி நாயுடு
திரு சி ராஜகோபாலாச்சாரி
திரு டங்குத்துரி பிரகாரம்
திரு ஓ பி ராமசாமி ரெட்டியார்
திரு பி எஸ் குமாரசாமி ராஜா
திரு சி ராஜகோபாலாச்சாரி
திரு கே என் காமராஜர்
திரு எம் பகவத்ஸலம்
டாக்டர் சி என் அண்ணாதுரை
டாக்டர் கலைஞர் மு கருணாநிதி
டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன்
திருமதி ஜானகி ராமச்சந்திரன்
டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா
திரு ஓ பன்னீர்செல்வம்
திரு எடப்பாடி கே பழனிசாமி
8 Home Remedies tips for hair growth in tamil
Telegram group | Click Here |
YouTube | Click Here |