தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு முதல்வர் இன்று ஆலோசனை(Tamil Nadu full lockdown again extension 1week)
தமிழகத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது அதனை மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதல்வராக திரு மு க ஸ்டாலின் அவர்கள் புதிய அணுகுமுறைகள் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தினமும் முயற்சி செய்து வருகிறார்.
அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது ஆனால் கடந்த ஆண்டை போல் இல்லாமல் இம்முறை பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது மேலும் இறைச்சி கடைகளை திறந்து இருக்கலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
இதனால் முழு ஊரடங்கு போல் இல்லாமல் பொது மக்களின் நடமாட்டம் தினசரி அதிகமாகவே காணப்பட்டது குறிப்பாக சென்னை மற்றும் மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு பொதுமக்களின் நடமாட்டம் இருந்தது.
இதனால் நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை தினசரி 35 ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய பாதிப்புகள் பதிவாகி வந்தது உயிரிழப்புகளும் அதிகரித்தது இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மே மாதம் 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகள் இன்றி மிகத் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று உத்தரவிட்டார் இதனால் மருந்தகங்கள் ஹோட்டல்கள் தவிர அனைத்து கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.
சென்னை ,செங்கல்பட்டு போன்ற இடங்களில் இப்பொழுது நோய்த்தொற்று எண்ணிக்கை முழு ஊரடங்கு பலனாக குறைந்து வருகிறது ஆனால் கோயம்புத்தூரில் மட்டும் நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை தினந்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
எங்கள் YOUTUBE பக்கத்தை காண இங்கே கிளிக் செய்யவும்
இதன் காரணமாக ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு மீண்டும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.