தமிழக அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் (Tamil Nadu Private job portal 2020….!)
தமிழகத்தில் ஆண்டுதோறும் பட்டப்படிப்பு முடித்து வேலைதேடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் புதிய இணையதள வசதியை அறிமுகம் செய்தது.
இதன் மூலம் தமிழகத்திலுள்ள சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தங்களது அலுவலகங்கள் அல்லது தொழிற்சாலைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு குறித்த அறிவிப்புகளை பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மூளை முடுக்குகளில் உள்ள சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தினமும் பல்வேறு வகையான பணி காலியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம்.
நேற்று வரை 2,279 நிறுவனங்கள் 40 துறைகளில் 36,1132 காலிப்பணியிடங்கள் உள்ளதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
2,394 நபர்களுக்கு இதன் மூலம் வேலை கிடைத்துள்ளது.
இந்த இணையதளத்தில் வேலை பற்றிய முழு விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது.
இந்த இணையதளத்தில் நுழைந்தவுடன் தங்களுக்கு பிடித்த மொழியினை தேர்வு செய்துகொள்ளலாம் தமிழ் அல்லது ஆங்கிலம்.
இந்த இணையதளத்தில் சேவைகளை பயன்படுத்த உங்களுக்கு ஒரு புதிய கணக்கை உருவாக்க வேண்டும். அதில் தங்களின் சுய விவரங்கள் முழுமையாக உள்ளீடு செய்து தங்களின் தேடலை தொடங்கவும்.
சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பதிவிட்டுள்ள காலிப்பணியிடங்களை நன்கு ஆராய்ந்து உங்கள் திறமைக்கேற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
உங்கள் திறமைக்கேற்ற வேலையை தேர்வு செய்த பின் நிறுவனம் அல்லது அலுவலகத்திற்கு உங்களை பற்றிய முழு விவரத்தை அனுப்பவும்.
கல்வித்தகுதி.
பி.காம் மற்றும் எம்.காம் படித்த பட்டதாரிகள் டேலி மற்றும் ஜிஎஸ்டில் பணிபுரியும் திறன்கொண்ட பட்டதாரிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு துறையில் முன் அனுபவம் இருந்தால் வேலை பெறுவது எளிதாகும்.
இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் காலியாக இருக்க பணியிடங்கள் குறித்து அறிவிப்புகள் இந்த இணையதளத்தில் தினமும் வெளியிடப்படும். இதனைப் பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
svamitva scheme launched 2020 in India
மத்திய மற்றும் மாநில அரசுகள் கொண்டுவரும் புதிய திட்டங்கள் அவற்றின் நன்மைகள் தீமைகளை முழுமையாக இந்த இணையதளத்தின் மூலம் வெளியிடப்படும்.twitter