தனி மாநிலமாக இந்தியாவில் கெத்து காட்டும் தமிழகம் 2020ம் ஆண்டில் பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம்.!!!(Tamil nadu state economic growth 2020)
கொரோன வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பல மாதங்களாக அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில்துறை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு சென்றது கடந்த ஏப்ரல் மாதம்.
இப்பொழுது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு பொருளாதர முன்னோற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் கடுமையான முயற்ச்சிகளை எடுத்து வருகிறது இதனால் வேலை வாய்ப்பு மெல்ல மெல்ல உயர தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
சீனாவில் இருந்து பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையே வேறு நாட்டுக்கு மாற்ற ஏற்பாடு செய்தன.ஆப்பிள் (Apple) உள்ளிட்ட நிறுவனங்கள் இதனை அறிந்த தமிழக அரசு பல கட்ட முயற்ச்சிக்கு பின்பு அப்பிள் நிறுவன தயரிப்புகளை சென்னைக்கு கொண்டு வந்தது. மேலும் டாடா TATA குழுமம் 7,000 கோடி ரூபாய் முதலிட்டில் ஒசுரில் எலக்டிரிக்கள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலைக்கு அடிக்கள் நாட்டி பணிகள் நடைபெறுகிறது மற்றும் உலகின் முன்னனில் உள்ள டெஸ்லா Tesla நிறுவனத்துடன் தமிழக அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது டெஸ்லா ஆலையோ தமிழகத்தில் அமைக்க.
CME அமைப்பு வெளியிட்ட அறிக்கை.
2020ம் ஆண்டு துவக்கத்தில் தமிழகத்தில் வேலை வேலைவாய்ப்பின்மை Unemployment 1.6 சதவித்தமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதம் உரடங்கு உத்தரவினால் 49.8 சதவிகிதமாக உயர்ந்தது.
சென்னை கொரோன வைரஸ் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் பல்வேறு முயற்ச்சிகளின் பலனாக கொரோ வைரஸ் தமிழகத்தில் முழுவதும். கட்டுப்படுத்தப்பட்டது.
கடைசி இடத்தில் உள்ளது தமிழகம்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 49.8 சதவிகிதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை நவம்பர் மாதம் வெறும் 1.1 சதவித்தமாக உள்ளது. மேலும் இந்தியாவிலே அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. வேலை வாய்ப்பின்மையில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது இந்தியாவில்.
IT துறையில் புதிய சாதனை.
கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் இருந்து மட்டும் 25,000 கோடி ரூபாய்க்கு Software மென்பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டுளது.என்று Software Technology park Of India வின் இயக்குனர் சன்ஜய் தியாகி சொல்லியிருக்கிறார்.சென்ற ஆண்டை விட இது பல மடங்கு உயர்வு.
சிறந்த மாநிலத்துக்கான விருது கொடுக்கப்பட்டது தமிழக அரசுக்கு.
எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழக அரசு உள்ளது என்று The Times of India என்ற பத்திரிக்கை சிறந்த மாநிலத்துக்காண அறிவிப்பை வெளியிட்டது.
இன்றைய இளைஞர்களுக்கான சிறந்த 7 முதலீடு திட்டங்கள். யார் யாருக்கு என்னென்ன திட்டம்…!!!
பிரதமரின் கனவை நினைவாக்க தமிழக அரசு பங்களிப்பு மிக முக்கியமாக அமைந்துள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதர நிலைக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.இதற்கு தமிழகம் 500 மில்லியன் டாலர் அளவுக்கு பங்களிக்க வேண்டும் என்று செய்தி வெளியிட்டுள்ளார் Software Technology park Of India வின் இயக்குனர் சன்ஜய் தியாகி.