கரண்ட் பில் திடீரென்று அதிகமாகி விட்டதா?என்ன காரணம் இதுதான் அரசுக்கு Tamil Nadu the electricity bill has gone up lot

Tamil Nadu the electricity bill has gone up lot

இந்த மாதம் கரண்ட் பில் கட்டப் போகிறீர்களா? கரண்ட் பில் திடீரென்று அதிகமாகி விட்டதா?என்ன காரணம் இதுதான் அரசுக்கு முக்கிய கோரிக்கை..!

கரண்ட் பில் அதிகமாக வருவதாக வணிக வளாகம் நடத்தும் நபர்கள், கடை வைத்திருக்கும் நபர்கள், தொழிற்சாலை வைத்திருக்கும் வியாபாரிகள், திடீரென்று ஒரு கோரிக்கையை இணையதளத்தில் வைத்துள்ளார்கள்.

தமிழகத்தின் மின் உற்பத்தி மின் பகிர்மான மற்றும் தொடர்புடைய  பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

இதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) தமிழ்நாடு மின் தொடர்புடைய கழகம் (TANTRANSCO) என 2 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

தமிழக முழுவதும் 3 கோடிக்கு அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன இதில் விவசாயத்திற்கு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

வழக்கமான வீடுகளை பொறுத்த வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாட்டு கணக்கீடு செய்யப்படும்.

அந்த வகையில் உயர் அழுத்த மின்சாரம் மாதம் தோறும் கணக்கீடு செய்யப்படும்.

இப்பொழுது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது

இதன் மூலம் மின்வாரிய ஊழியர்கள் அதனை கணக்கீடு செய்து நுகர்வோர்களுக்கு தெரிவிப்பதை நுகர்வோர்களும் அந்த கணக்கீட்டின்படி கட்டணங்களை செலுத்துகின்றனர்.

அதன்படி ஒவ்வொரு வீடாக சென்று மின்மீட்டர்களில் பதிவாகும் மின்சார அளவை கணக்கெடுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்காக மின் கணக்கீட்டாளர்களை தனியாக நியமித்து பணிகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொள்கிறது,இதைத் தவிர தமிழக அரசின் சிறப்பு திட்டமாக வீடுகளுக்கு மின்சாரம் 100 யூனிட்கள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது.

சமீப காலமாக சென்னையில் பல இடங்களில் மின் கட்டண கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகும் இதனால்  தங்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்கள்.

குறிப்பாக சென்னையில் அண்ணா நகர், அம்பத்தூர், மாதவரம், அடையாறு, பெருங்குடி, தாம்பரம், உள்ளிட்ட பல பகுதிகளில் தாமதமாகவே மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.

அதிலும் ஒவ்வொரு முறையும் 5 நாட்கள் 8 நாட்கள் வரை தாமதமாக கணக்கெடுக்கப்படுவதால் ரூபாய் 300 முதல் ரூபாய் 500 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாக பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.

உதாரணமாக ஒரு வீட்டில் இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படும் நிலையில் தாமதமாக வந்து கணக்கெடுப்பதால்.

கூடுதலாக 30 முதல் 40 யூனிட் வரை பயன்படுத்தப்படுகிறது, அதற்கும் சேர்த்து மின் கட்டணம் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

கணக்கெடுப்பதில் மிகப்பெரிய தடுமாற்றம்

தமிழக அரசு மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் அறிவிப்பை வெளியிடும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் அதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.

இரண்டு மாதத்தையும் தாண்டி கணக்கெடுப்பதால் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது,அதனால் மின் ஊழியர்கள் சரியான நாளில் வந்து கணக்கெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் வைத்துள்ளார்கள்.

இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மின் கட்டணம் தாமதமாக கணக்கெடுக்கப்படுகிறது.

தாமதம் ஏற்படும் இடங்களில் இரண்டு மாதங்களுக்கு சரியாக சராசரி கணக்கிட்டு அதில் கால தாமதமான நாட்களை கழித்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்றார்.

Joining our WhatsApp group

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

ஜூலை மாத ராசி பலன்கள் 2023

How to get new ration card in tamil nadu

பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

கட்டுமான பொருட்களின் விலைப்பட்டியல்..!

Leave a Comment