Tamilnadu govt covid-19 vaccine full details
தமிழக அரசின் கடின உழைப்புக்கு மிகப்பெரிய பலன் கிடைத்துள்ளது(Tamilnadu govt covid-19 vaccine full details
சீனா, ரஷ்யா, அமெரிக்கா, தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிக அளவு தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டுள்ளதால் அங்கு முககவசம் அணிய தேவையில்லை என்று அந்த நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளது இதனைப் பார்க்கும்போது இந்தியாவின் நிலைமை என்ன என்று தெரியவில்லை.
ஏனெனில் இங்கு தடுப்பூசி பற்றி பல்வேறு தவறான தகவல்கள் வாட்ஸ்அப், யூடியூப், ஃபேஸ்புக், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்ப படுவதால் தடுப்பு ஊசி மீது மக்களுக்கு ஒரு பயம் உண்டாகி விட்டது இதனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை பல்வேறு வழிகளில் விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
அதன் பலனாக நேற்று மட்டும் 2,24,543 நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்கள் இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது ஏனெனில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் நபர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வந்ததில்லை இதுவரைக்கும் தமிழகத்தில்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் நபர்கள் கிட்ட தட்ட இந்த நோய்க்கு பாதிக்கப்படுகிறார்கள் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது அதுமட்டுமில்லாமல் இப்பொழுது கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மக்களிடம் பயம் உண்டாகி விட்டது கொரோனவை பற்றி.
இதனால் தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை சமீப நாட்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மேலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, போன்ற நாடுகள் முக கவசம் அணிய தேவையில்லை என்ற செய்தி வெளியிட்டது மக்கள் மத்தியில் ஓரளவுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக உங்கள் பகுதியில் 10 நபர்களை நீங்கள் தடுப்பூசி போட ரெடி செய்தால் போதும் அரசின் தடுப்பூசி குழு நேரடியாகவே உங்கள் பகுதிக்கு வந்து தடுப்பூசி போட்டு விட்டு செல்லும் தமிழகம் முழுக்க தற்போது ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் நேரடியாக தடுப்பூசி கேம்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதி மிக பலமாக இருப்பது கொரோனா வைரஸ் மூலம் நன்கு தெரிகிறது தமிழ்நாட்டில் 242 அரசு மருத்துவமனையில் மற்றும் 760 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது மற்றும் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருவள்ளூர் என பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து நேரடியாகவே ஆய்வு செய்து வருகிறார் மேலும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் களத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
எங்கள் YOUTUBE பக்கத்தை காண இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை ஒரே நாளில் போடப்பட்ட தடுப்பூசிகளின் விவரம்.
மே 19=29,338
மே20=30,553
மே21=32,645
மே22=41,689
மே24=73,926
மே25=224543
ஒரே நாளில் எப்படி இவ்வளவு பெரிய மாற்றம்.
தமிழக அரசின் தடுப்பூசி குறித்து தொடர்ந்து செய்யும் பிரச்சாரங்கள் இதற்கு முதல் காரணம் இரண்டாவது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட தொடங்கியுள்ளதால் பல இளைஞர்கள் ஆர்வமாக தடுப்பூசி போட வருகிறார்கள் தடுப்பூசிகள் கேம்புகள் காரணமாக மக்கள் பலர் தொடர்ச்சியாக தடுப்பூசி போட முன்வருகிறார்கள்.