தமிழக மின்துறையில் 10&12வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை 80 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு(TANGEDCO Wireman recruitment 2021 last date)
தமிழகத்தில் இப்போது முழு ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் இப்போது அதிக அளவில் வெளிவந்த நிலையில் உள்ளது
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அலுவலகத்திலிருந்து (TANGEDCO) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இப்பொழுது வெளிவந்துள்ளது அந்த அறிவிப்பில் Electrician Wireman பணிகளுக்கு 80 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த வேலையைப் பற்றி சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் கல்வி தகுதி வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம் விண்ணப்பதாரர்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021
TANGEDCO கழகத்தில் Electrician & Wireman ஆகிய பணிகளுக்கு என மொத்தம் 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Electrician – 50 காலிப்பணியிடங்கள்
Wireman – 30 காலிப்பணியிடங்கள்
TANGEDCO கல்விதகுதி
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் மத்திய மாநில அரசு பாடத்திட்டங்களில் கீழ் 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்
TANGEDCO சம்பள விவரம்
இது மத்திய அரசு பயிற்சி பணி என்பதால் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ 7000/- முதல் அதிகபட்சம் 7050/- வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது
TANGEDCO விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்
இது ஒரு பயிற்சி பணி (Apprentice work ) என்பதால் வயது வரம்பு பற்றி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நன்கு தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க வேண்டும்
Jasmine Flower Best Health 5 Benefits in tamil
இரண்டு விதமான பயிற்சி பணி இருப்பதால் விண்ணப்பதாரர்கள் இதனை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்