Thanjavur New Coal Mine Bad news 2023
விளைநிலத்தில் நிலக்கரி சுரங்கம் எங்கள் தலையில் விழுந்த இடி மத்திய அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு.
தமிழ்நாட்டு இளைஞர்கள் மறுபடியும் விழித்துக் கொள்ள வேண்டிய ஒரு நேரம் வந்துவிட்டது, தமிழ்நாட்டில் நெற்களஞ்சியம், தமிழ்நாட்டின் உணவு களஞ்சியம், தமிழ்நாட்டின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் பாதுகாக்கப்பட்ட.
வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை இந்த மத்திய அரசு அழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கு முன்பு காங்கிரஸ் அரசு ஹைட்ரஜன் திட்டத்தை கொண்டு வந்தது இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது அது கைவிடப்பட்டது இப்போது பாஜகவும் நிலக்கரி சுரங்கத்தை கொண்டுவந்துள்ளது.
இதனால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டபங்கள் அழிந்தால் தமிழ்நாடு உணவுக்கு கையேந்த வேண்டிய சூழ்நிலை வந்துவிடும்.
இதை கடுமையாக எதிர்க்க வேண்டும் உடனடியாக இதனை தடுக்க வேண்டும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும் இது அனைவரின் கடமை.
அனைவரின் கடமை விட இது அனைவருக்கும் உரிமை நம்மளுடைய காவேரி மண்டலம் அழிந்தால் தமிழ்நாட்டின் அடையாளம் அழிந்துவிடும்.
காவிரி மண்டலத்தில் தான் சோழர்கள் எழுப்பிய வரலாற்றுச் சிற்பம் மிக்க கோவில்களும் ஏரிகளும் நிறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி பிடிக்க முடியவில்லை என்ற நோக்கம் இரண்டு தேசிய கட்சிகளுக்கும் இருக்கிறது இதனால் தமிழ்நாட்டின் சொர்க்கம் என்று அழைக்கப்படும்.
காவிரி டெல்டா மாவட்டங்களை அழிப்பதற்கு காங்கிரசும் பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.
Thanjavur New Coal Mine Bad news 2023 இதற்கு முன்பு இந்த விடியாத அரசு காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து ஹைட்ரஜன் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது, இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பி பின்பு ஆட்சி மாறி பத்து ஆண்டுகள் இது தடுக்கப்பட்டு.
அதிமுக அரசு காவேரி மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அங்கு எந்த ஒரு தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது என ஒரு சட்டத்தையும் நிறைவேற்றியது.
ஆனால் இப்பொழுது பாஜக அரசு இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை அழிப்பதற்கு தீவிர முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறது.
காவிரி படுகையில் சுரங்கம்
என்எல்சி 3வது நிலக்கரி சுரங்கத்தின் பெரும் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரிப்படியை ஒட்டி அமைய உள்ளது.
5வது வீராணம் நிலக்கரி திட்டம் 6வதாக பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் 7வதாக சேர்த்தியதோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம் 8வது தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரி திட்டம் 9தாவது அரியலூர் மாவட்டம் மைக்கேல் கூபட்டி நிலக்கரி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படடுள்ளன.
வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம்
Thanjavur New Coal Mine Bad news 2023 இவற்றில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மூன்று நிலக்கரி திட்டங்கள் தவிர மீதமுள்ள ஆறு திட்டங்களுக்காக மட்டுமே குறைந்தபட்சம் 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் கூடும்.
இவற்றில் வீராணம் பாளையங்கோட்டை சேர்ந்த கிழக்கே வடசேரி ஆகிய திட்டங்கள் காவிரி பாதுக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகிறது.
விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு
Thanjavur New Coal Mine Bad news 2023 பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஒரத்தநாடு சுற்றுவட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க விலை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள்.