29 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா லாம்ப்டா அறிகுறிகள் தடுப்பூசி இதற்கு பயன் தருமா(The New Covid-19 Lambda variant virus Details)
உலகில் இதுவரைக்கும் தோன்றிய வைரஸ்களில் மிகவும் தீவிரமாக தன்னை உருமாற்றிக் கொள்ளும் வைரஸ்யாக இது உள்ளது பல விஞ்ஞானிகள் மற்றும் பல முன்னணி நிறுவனங்களும் இந்த வைரஸின் தோற்றம் மற்றும் பிறப்பிடம் குறித்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்
2019ஆம் ஆண்டு வைரஸ் பரவிய ஆரம்பத்திலிருந்து இன்றுவரை வைரஸ் பல உருமாற்றங்களை பெற்று மக்களிடையே அதிவேகமாக பரவி உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் கடுமையான பொருளாதார பாதிப்பு மட்டுமில்லாமல் சுகாதார உள்கட்டமைப்பு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது
உலக சுகாதார மையம் இப்பொழுது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது லாம்ப்டா என்று அழைக்கப்படும் புதிய பிறழ்வு சமீபத்தில் கவனிக்கப்பட வேண்டிய வைரஸின் மாறுபாட்டின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது
அதனால் ஏற்படும் பாதிப்புகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் ஆனால் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு எந்த வகையிலும் சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவித்துள்ளது
இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது
கொரோனா வைரஸின் மாறுபாடுகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது அதில் Variants of Interest (VOI) மற்றும் Variants of Concecm (VOC) இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் VOI இவை பெரும் சிக்கல்களை மனிதர்களுக்கு ஏற்படுத்தக்கூடும் ஆனால் VOC பிரிவை சேர்ந்த வைரஸ் சிக்கல்களை உண்டாக்கும் ஆனால் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது
பெரு நாட்டில் கண்டறியப்பட்ட வைரஸ் மாறுபாடு
கொரோனா லாம்ப்டா வகையானது வைரஸ் முதன்முதலில் பெருநாட்டில் கண்டறியப்பட்டது என்றும் இதன் மரபணு குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் மேலும் இது அதிக அளவில் வேகமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
2020இல் உருமாறிய வைரஸ்
SARS – CoV-2 பரம்பரை C37 முதன்முதலில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெருநாட்டில் கண்டறியப்பட்டது இது பல பிறழ்வுகளை கொண்டுள்ளது குறிப்பாக கொரோனா பாதிப்பை அதிகரிப்பதற்கு தேவையான மாற்றங்களை தன்னுள் வைத்து உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
MOST READ கொரோனா குணமடைந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்தி
29 நாடுகளில் பரவியுள்ள உருமாற்றமடைந்த லாம்ப்டா
தற்போது உலகில் 29 நாடுகளில் லாம்ப்டா பிறழ்வுவகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில், சிலி, பெரு, ஈக்வடார் மற்றும் அர்ஜென்டினா ஆகிய பகுதிகளில் லாம்ப்டா வழக்குகள் அதிகமாக பட்டுள்ளதாகவும் இருப்பினும் இது தென் அமெரிக்காவில் மிகவும் பரவலாக பரவி உள்ளது என்றும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இன்று வரை பதிவான வழக்குகளில் சுமார் 80 சதவீதத்திற்கு மேல் லாம்ப்டா வகை வைரஸ்யுடன் இது தொடர்பு உள்ளதாகவும் பெரு நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
ஏற்கனவே லாம்ப்டா மரபான குறித்த தகவல்களை உலக சுகாதார மையத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் இதுதான் வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்
அறிகுறிகள் என்ன தடுப்பூசி இதற்கு பயன் தருமா
லாம்ப்டா வைரஸ் அறிகுறிகள் ஏற்கனவே உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிகுறிகளுடன் ஒத்துப்போகிறது காய்ச்சல், தலைவலி, இருமல், சளி மற்றும் வாசனை இழப்பு ஆகியவை அறிகுறிகளாக உள்ளது இருப்பினும் வித்தியாசமாக புதிதாக எதுவும் தென்படவில்லை இதற்கான ஆய்வுகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
லாம்ப்டா வைரஸின் மாறுபாடு பரவல் எப்படி கட்டுப்படுத்துவது இந்த லாம்ப்டா வைரஸ் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் மேலும் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இதற்கு பயன் கொடுக்குமா
அழகான பளபளப்பான முகம் மற்றும் சருமம் வேண்டுமானால்
அல்லது இந்த லாம்ப்டா வைரஸ் தடுப்பூசிகளின் செயல்திறனில் இருந்து தப்பித்து விடுமா என கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது என உலக சுகாதார மையம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது
இதை ஏன் Variants of Interest இப்படி அழைக்கப்படுகிறது
உலக சுகாதார மையம் கவனிக்கப்படவேண்டிய வைரஸ் மாறுபாடு வகைகளுடன் லாம்ப்டா சேர்த்துள்ளது ஏனெனில் இது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, மாறுபாடு போன்ற தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா மாறுபாடுகளுக்கு முந்தைய நிலைமையை தவிர வேறு ஏதுமில்லை என தெரிவித்துள்ளது