These foods can cause bad breath 2022
மாஸ்க்போட்டோ வாய்ரொம்ப நாற்றம்மடிக்கிறதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்கள் சரியாகிவிடும்..!
அனைவரும் கட்டாயம் இப்பொழுது முகக்கவசம் அணிந்து கொண்டுதான் வெளியில் வரவேண்டும் என ஒரு கடுமையான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் வேலை செய்யும் நபர்கள் அதுமட்டுமில்லாமல் பொது வெளியில் இருக்கும் நபர்கள், எப்பொழுதும் முகக்கவசம் அணிய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
மருத்துவ ரீதியாக ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுவது தான் வாய் துர்நாற்றம் வாயிலிருந்து வீசும் ஒருவிதமான விரும்பத்தகாத வாசனையை தற்போது பலர் முகக்கவசம் அணியும் போது உணர்கிறார்கள்.
ஒரு நபருக்கு வாய்துர்நாற்றம், மோசமான சுகாதாரம் அல்லது வாய், பற்கள், ஈறுகள், தொண்டை அல்லது செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சினைகளால் ஏற்படலாம்.
நீங்கள் சாப்பிடும் உணவுகள் வாயில் உடைக்க தொடங்குகிறது இது ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு நுரையீரல் வரை பயணித்து நீங்கள் சுவாசிக்கும் காற்றை பாதிக்கிறது.
வெங்காயம், பூண்டு போன்ற ஒரு வலுவான வாசனையை கொண்ட உணவுகளை சாப்பிட்டால், அது வாயில் துர்நாற்றத்தை அதிக அளவில் ஏற்படுத்திவிடும்.
உங்களுடைய விலை உயர்ந்த டூத்பேஸ்ட் கூட, இத்தகைய வாய்துர்நாற்றத்தை தற்காலிகமாக மட்டுமே மறைக்கும்.
இந்த உணவுகள் உடலினுள் சென்றால் அந்த நாற்றம் முழுமையாகப் போகாது இது தவிர பாலாடைக்கட்டி, மசாலா பொருட்கள், ஆரஞ்சு ஜூஸ், ஆல்கஹால் போன்றவையும் வாய் துர்நாற்றத்தை அதிகளவில் ஏற்படுத்திவிடும்.
செரிமான பிரச்சனைகள்
மோசமான செரிமானம், குடல் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல்வேறு வகையான செரிமான பிரச்சனைகளால் வாயில் சல்பர் வாயுக்கள் சென்று வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
மோசமான வாய் சுகாதாரம்
வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் வாயில் பாக்டீரியாக்கள் அதிகம் பெருக்கமடையும் இப்படி அதிகரிக்கும் பாக்டீரியாக்கள் சல்பரை வெளியிடுகின்றன.
இவை அழுகிய முட்டை போன்ற வாசனை உண்டாக்கி வாய் துர்நாற்றத்தைப் அதிக அளவில் கடுமையாக ஏற்படுத்திவிடுகிறது.
காப்பி மற்றும் குடிப்பழக்கம்
இந்த இரண்டு பழக்கமே வலுவான சுவை கொண்டவை காபி அல்லது ஆல்கஹால் அதிகமாக குடிக்கும் போது அவை வாயில் உமிழ் நீர் உற்பத்தியை பாதிக்கிறது.
வாயில் பாக்டீரியாக்களை வெளியேற்றாமல் வாயிலே தங்கவைத்து வாய் துர்நாற்றத்தை கடுமையாக ஏற்படுத்தும்.
உங்கள் வாயில் ஒருவேளை கடுமையாக துர்நாற்றம் வீசினால் அது உடலின் சமச்சீரற்ற தன்மையை குறிப்பதாக இருக்கும்.
இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் அல்லது இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
புகைப்பிடிக்கும் பழக்கம்
சிகரெட்டில் ஏற்கனவே பல்வேறு மோசமான நச்சுக்கள் மற்றும் வேதியல் பொருட்கள் கலந்துள்ளன இவை உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் அதுமட்டுமில்லாமல் வாய் துர்நாற்றத்தையும் எப்பொழுதும் ஏற்படுத்தும்.
வாய் வறட்சி
ஒரு நபரின் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வாய் வறட்சி, வாயில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுவதில் உமிழ்நீர் முக்கிய வேலையை செய்கிறது, மற்றும் இதுவே வாயை எப்பொழுது புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.
இந்த இயற்கை உணவுகள் வாய் துர்நாற்றத்தை போக்கும்
துளசி, ஓமம், சீரகம், போன்ற உணவுகளை பச்சையாக சாப்பிடுவது வாய் துர்நாற்றம் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் இது தவிர முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் காணப்படும் சில முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட் ஊட்டச்சத்துக்கள் வாய் துர்நாற்றத்திற்கு எதிராக செயல்படும்.
இந்த உணவுகள் செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கும் மற்றும் செரிமான பாதையை சுத்தமாக வைத்திருக்கும், அதற்கு தேவையான நார்ச்சத்தையும் வழங்கும்.
வறுத்த சோம்பு அல்லது சீரக விதைகளை உணவு சாப்பிட்ட பிறகு வாயில் போட்டு மென்றால், செரிமானம் சிறப்பாக நடக்கும் இதனால் வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்.
இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி
போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் வாயில் ஈரப்பதம் இருக்கும், இதனால் உமிழ்நீர் உற்பத்தி அதிகமாகும், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும்.
Best 6 insurance plans you must take
எலுமிச்சை பழத்தை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்கவேண்டும், இது வாய் துர்நாற்றத்தைப் போக்கும், அதுமட்டுமில்லாமல் உடல் துர்நாற்றத்தையும் தடுத்து விடும்.