Thirukkai meen amazing 5 health benefits list
மீன் மனிதனின் முக்கிய உணவு, மீன் சாப்பிடுங்கள் என்று சொல்லாத மருத்துவர்களே இல்லை என்று சொல்லலாம்.
மீன் சாப்பிடாத மருத்துவர்களும் கூட மீன் சாப்பிடுங்கள் என்று தங்கள் நோயாளிகளுக்கு அறிவுரை சொல்கிறார்கள் அதுவும் முக்கியமாக.
கொலஸ்டரோல், அதீத எடை, இருதய நோய்கள், போன்ற பிரச்சனை சந்திக்கும் நபர்கள் அதிகமாக மீன் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் திறம்பட அதிகரிக்க வேண்டும், புத்திக்கூர்மை என்று மனிதனை ஆரோக்கிய வட்டத்துக்குள் வைத்திருப்பதில் மீனின் பங்கு பெரியது.
சில நபர்கள் சொல்லுவார்கள் காய்கறி மற்றும் போதுமான ஆரோக்கியமான ஊட்டச்சத்தை வழங்கும், என்று ஆனால் வேறு எந்த உணவிலும் கிடைக்காத சில முக்கியமான ஊட்டச்சத்துக்கள் கடல் உணவில் கிடைக்கிறது.
முக்கியமாக மீனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நம்முடைய வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
மீன் உணவில் கொழுப்பு அறவே இல்லை அதிகமாக புரதச் சத்து உள்ளது, இதில் உள்ள ஒமேகா 3 என்ற ஒரு வகை அமிலம் வேறு எந்த உணவிலும் இல்லை.
உடலில் எந்த நோயும் அண்டாமல் இருக்க இந்த அமிலம் பெரிதும் உதவுகிறது, அதனாலதான் மீன் உணவு சாப்பிடுபவர்களுக்கு அவர்கள் அறியாமலே ஒமேகா-3 ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது.
வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது மீன் உணவு சாப்பிட வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்
தாய்மார்களின் உணவுப் பழக்க வழக்கத்திற்கும் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையே ஒற்றுமை வேற்றுமைகள் குறித்து ஆராய்ந்து.
இந்த ஆராய்ச்சியில் நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
என முடிவு வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில்.
குழந்தைகளுக்கு மூன்று வயதாகும் போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன பார்வை எளிதில் உள்வாங்குதல் கவனம் சிதறாமல்.
போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு ஏற்றுக்கொண்ட தாய்மார்களின் குழந்தைகள் மட்டுமே.
சரியா இருந்தபோதும் கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் மீன் சாப்பிடுவதில் சற்று நிதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சில மேலை நாடுகளில் மீன்களில் இருக்கக் கூடிய சிறிதளவு பாதரசம் கரு உருவாகும் பருவத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்களை உண்ணும் மீன்கள் மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகிறது.
அத்தகைய மீன்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள், பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே ஆரோக்கியமான மீன் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவையான ரவா குலோப்ஜாம் செய்வது எப்படி..!
மீனில் புரதச்சத்து அதிகமாக உள்ளது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகள் மிக குறைவாகவே இருக்கிறது, ஆனால் மிக ஆரோக்கியமான நல்ல கொழுப்பு அமிலமான ஒமேகா 3 அதிகம் நிறைந்துள்ளது.
Gundar thaduppu act full details in tamil 2022
திருக்கை மீனின் ஆரோக்கிய நன்மைகள்
திருக்கை மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலமானது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும், ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை முற்றிலும் தடுக்கும்.
இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு, வயதாகும்போது பார்வைத் திறன் மேம்படும், நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்,புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.