throat cancer amazing treatment details 2022
தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள் என்ன..!
தொண்டை புற்றுநோய் என்பது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படக்கூடிய புற்று நோய்களில் ஒன்று.
இந்த புற்றுநோய் தொண்டைப் பகுதியில் பல்வேறு பகுதியில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் ஏற்படுகிறது.
தொண்டை புற்றுநோய் என்பது தொண்டையில் பாதிக்கப்படும் இடங்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன
தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் என்பது புற்றுநோய் உள்ள இடத்தையும், அது தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதையும் பொறுத்து மாறுபடும்.
அவற்றில் சில தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் பற்றி இப்பொழுது இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
தொண்டை புற்றுநோய் அறிகுறிகள்
குரல் மாற்றம் அதாவது பேச்சு தெளிவின்மை அல்லது பேசும் போது சிரமப்படுவது
தொண்டை புண்
தொண்டை வலி
நாள்பட்ட இருமல்
ஏதாவது விழுங்கும்போது சிரமப்படுவது
தொண்டையில் கட்டி
திடீரென்று எடை இழப்பு
கண்கள் தாடை மற்றும் தொண்டையில் ஏற்படும் வீக்கம்
காதுவலி
காதில் ரீங்காரம் சத்தம் கேட்பது
தொண்டைக்குள் ஏதோ ஒன்று சிக்கி இருக்கின்ற போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
இந்த அனைத்து அறிகுறிகளும் சாதாரண தொண்டை தொற்று நோய்களுக்கான அறிகுறிகளுடன் நம்மை குழப்பக்கூடியது.
இருப்பினும் தொண்டை புற்று நோயானது, நீண்டகால அறிகுறிகளை கொண்டிருக்கிறது, இருப்பினும் இந்த புற்றுநோய் முன்னேற்றம் அடையும் போது மட்டுமே தெரிய வரும்.
இதற்கான சிகிச்சைகள் என்ன
throat cancer amazing treatment தொண்டை புற்றுநோய் சிகிச்சை புற்றுநோய் உள்ள இடம், தொண்டை புற்று நோய் வகை, மற்றும் தொண்டை புற்று நோயின் அளவு, ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
கதிர்வீச்சு சிகிச்சையானது குறிப்பிட்ட நோய் தாக்கப்பட்ட இடங்களில், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்க குறிப்பிட்ட அளவு காமா கதிர்கள் பயன்படுத்தப்படுகிறது.
கீமோதெரபி
கீமோ தெரபியில் சில மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது, இது புற்றுநோய் செல்களை நீக்க உதவுகிறது, தொண்டை புற்றுநோய் சிகிச்சையில், சிகிச்சையுடன் இந்த கீமோதெரபி அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
அறுவை சிகிச்சை தேவையா
throat cancer amazing treatment அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டிகளை நீக்க முடியும் ஒரு கட்டியை நீக்குவதற்கு மாற்ற திசுக்கள் அல்லது தைராய்டு பகுதிகளை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
இருப்பினும் இது வளரும் கட்டியின் அளவைப் பொறுத்து, அதே போல் புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க, நீணாநீர் சுரப்பிகளையும் நீக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க சிகிச்சை அல்லது கீமோதெரபி பயன்படுத்துவதாகும்,இந்த சிகிச்சை பொதுவாக பெரிய அளவிலான கட்டிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
மறுவாழ்வு சிகிச்சை என்றால் என்ன
மறுவாழ்வு சிகிச்சை புற்றுநோய் சிகிச்சை உடன் இணைந்து செய்யப்படுகிறது, இது உணவு பழக்கம், பேச்சு பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் முன்னேற்றம் அளிக்க உதவுகிறது.
அதாவது ஆலோசகர்கள், சமூக தொழிலாளர்கள், உதவியாளர்கள், மூலம் தீவிரமான சிகிச்சை அளிக்க முடியும், அதனால் மன அழுத்தத்தில் உள்ள நபர்களை மீட்க முடியும்.