TN 1000 rupees grant amount at ration shop

தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு ரு1000/- உதவித்தொகை வதந்திகளும் முற்றுப்புள்ளிகளும் ஒரு அலசல்(TN 1000 rupees grant amount at ration shop)

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனது தேர்தல் அறிக்கையில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அதிலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையை மக்களுக்கு வெளியிட்டாது

இது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது திமுகவும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று  ஆட்சி அமைத்தது அதன் பிறகுதான் மக்களிடம் மிக வேகமான ஒரு வதந்தி இன்று வரை பரவிக் கொண்டிருக்கிறது

பெண்கள் புகைப்படம் அவசியம் தேவையா

தமிழகத்தில் ரேஷன் அட்டையில் பெண்கள் புகைப்ப்படம்  இருந்தால் மட்டுமே குடும்பத்தலைவி முதல்வர் அறிவித்த சலுகைகள் கிடைக்கும் என்ற வதந்தி திரு மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற நாளில் இருந்து இன்று வரை பரவி வருகிறது சமூக வலைத்தளங்களில் வேகமாக

இதனால் ஏராளமான பெண்கள் புகைப்படத்தை ரேஷன் அட்டையில் மாற்றுவதற்கு உணவு வழங்கல் துறை அலுவலகத்தில் குவிந்து வருகிறார்கள்

TN 1000 rupees grand amount at ration for women

கிட்டதட்ட 2 மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் இப்பொழுது தமிழகம் முழுவதும் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது மேலும் டெல்டா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா ப்ளஸ் வைரஸ் ஆக உள்ளது இதுவரை தமிழகத்தில் 9 நபர்களுக்கு இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது

இப்பொழுது பெண்கள் அதிக அளவில் உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு மற்றும் இ-சேவை மையத்தில் குவிந்து வருவதால் மறுபடியும் கொரோனா தொற்று நோய் எண்ணிக்கை உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால்

உடனடியாக தமிழக அரசிடமிருந்து ஒரு உத்தரவு வெளிவந்துள்ளது அது என்னவென்றால் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை பெண்கள் நம்ப வேண்டாம் ரேஷன் அட்டைகளில் புகைப்படத்தை மாற்ற வேண்டாம் ரேஷன் கடைகளுக்கும் அலுவலகத்திற்கும்  மக்கள் தேவையின்றி செல்லவேண்டாம்

இந்த பெருந்தொற்று காலத்தில் மக்கள் ஒரு இடத்தில் கூட்டமாக கூடினால் அது கொரோனா   வைரஸ் பரவுவதற்கு 100% வழிவகை ஏற்படுத்திவிடும் என்று அறிவிப்பினை அவசர கால அடிப்படையில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் முறையாக தமிழக சட்டப்பேரவை கூடியது அப்போது ஆளுநர் உரையுடன் தமிழகத்தின் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் இந்த கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆளுநர் விவரித்தார் முதலமைச்சரும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார் அப்போதும்கூட இந்த உதவி தொகை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை

MOST READ  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சத்து 

TN 1000 rupees grand amount at ration for women

எனவே சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை மக்கள் நம்பி ஓரிடத்தில் கூட்டமாக கூடினால் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது 100% உறுதியாகி விடும்

what can do and don’ts Now covid-19 vaccine

இதனை தவிர்ப்பதற்கு மக்கள் அரசாங்கம் இந்த திட்டத்தை பற்றி எப்பொழுது செய்திகளை வெளியிடுகிறது அப்போது அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் போதும் 100% அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும் என தமிழக அரசு உறுதி செய்துள்ளது

Leave a Comment