tn cooperative bank gold loan Discount 2021

முதல்வர் ஸ்டாலின் உறுதி நகை கடன் தள்ளுபடி பயனாளிகளை தேர்வு செய்யும் பணி தீவிரம்(tn cooperative bank gold loan Discount 2021)

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் வாங்கியுள்ள நபர்களிடம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து இது குறித்து பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெறப்பட்ட நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை சரியாக வெளியிடப்படவில்லை.

இப்பொழுது இதுகுறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று கடன் பெற்றவர்கள் சமூக வலைத்தளம் மூலம் அரசை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள், இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் இந்த கடன் வழங்கியதில் கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும்.

tn cooperative bank gold loan Discount 2021

அது பற்றி தீவிரமாக விசாரணை இப்பொழுது நடைபெற்று வருவதாகவும் இந்த விஷயங்கள் முடிந்த பிறகு கண்டிப்பாக 5 சவரன் அளவுக்கு குறைவான நகை கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஒரு உறுதிமொழி வெளியிட்டார்.

தமிழக நிதிநிலை அமைச்சர் விளக்கமளித்தார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அதே நேரம் தமிழகத்தில் தற்போது நிலைமை அவ்வளவு சரியில்லை என்பதை நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெள்ளை அறிக்கை மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இப்பொழுது திமுக அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால் ஒரு பக்கம் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் அதேநேரம் நிதி பற்றாக்குறையை சமாளிக்க வேண்டும் என்ற இரு சவால்கள் முன் நிற்கிறது.

இந்த நிலையில்தான் புதிய யோசனை அரசுக்கு கைகொடுக்க உள்ளது அது அதிக நிபந்தனைகளை விதித்து பூர்த்தி செய்யக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது.

இவர்களுக்கு புதிய சிக்கல்

அரசு கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை அடமானம் வைத்தவர்களில் பட்டியலை கடந்த சில நாட்களாகவே தீவிரமாக அதிகாரிகள் தயாரித்து வருகிறார்கள் என்று கூட்டுறவு துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Click here to view our YouTube channel

கடன் தள்ளுபடியால் ஏற்கனவே பலன் அடைந்த நபர்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்பவர்கள், மற்றும் காங்கிரட் வீடு வைத்திருப்பவர்கள், என ஒவ்வொன்றையும் அரசு அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள் காரணம் இவர்களுக்கு கடன் தள்ளுபடி கிடையாது என்ற நோக்கத்துடன்.

tn cooperative bank gold loan Discount 2021

இதன் விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்ட பிறகு பயனாளிகளுக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்படும் தற்போது நகை கடன் தள்ளுபடியில் கூட்டுறவு வங்கிகல் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது, மேலும் நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் அரசு அறிவிப்பை தொடர்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்களது கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நோக்கில் இருக்கிறார்கள்.

8 Amazing Benefits of Eating Tuna fish

இதனால் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் கூட்டுறவு சங்கங்கள் திணறி வருகிறது இதை சமாளிக்க தமிழக அரசு இப்பொழுது பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளது.

Leave a Comment