tn covid-19 update new and school details
ஒருபக்கம் நீபா மறுபக்கம் பள்ளிகள் மீண்டும் மூடலா தமிழகத்தின் நிலைமை என்ன(tn covid-19 update new and school details)
நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் நிபா வைரஸ் பற்றி தேவையற்ற பதற்றம் தமிழகத்தில் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் பள்ளிக்கூடங்கள் மூடப்படுமா என்பது பற்றி கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் 9 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன, அதனைத் தொடர்ந்து அவைகள் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது தடுப்பூசிகள் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொது துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் முன்னிலையில் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது, இதன் பின்பு தேவை உள்ள மாவட்டங்களுக்கு போர்க்கால அடிப்படையில் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா நோய் தொற்று பாதிப்பு தினமும் 30,000 இருக்கிறது அதே போல் ஆந்திரா, மேற்குவங்காளம், போன்ற மாநிலங்களில் 2% என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் தற்போது 1% உள்ளது தமிழகத்தில் நேற்று வரை 3.5 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வரும் 12ம் தேதி தமிழகத்தில் 10,000 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போடும் அளவை அதிகரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தற்போதுவரை 14.4 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 6.2 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் 12 வயது குழந்தை நீபா வைரஸ் மூலம் உயிரிழந்துள்ளார், இதையடுத்து எல்லைப் பகுதியில் இப்பொழுது தமிழக அரசு மிக மிக தீவிரமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நாமக்கல், கடலூர், அரியலூர், உள்ளிட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதேபோல் கோவை, நீலகிரி, உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகபடுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
மீண்டும் பள்ளிக்கூடங்கள் மூடப்படுமா என்ற கேள்விக்கு ஏற்கனவே மாணவர்கள் 1 வருடம் வீட்டில் இருந்ததால் அதிக மன அழுத்தம் மற்றும் கற்றல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணத்தால்தான் இப்பொழுது படிப்படியாக பள்ளிக்கூடங்களை திறக்க அரசு முடிவு செய்து உள்ளது.
Click here to view our YouTube channel
இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு சில இடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக கண்காணித்து அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதுமட்டுமில்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் இருந்த அறை மூடப்படும்.
Best 8 benefits of having sex in tamil
விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களை சோதனை செய்து அபராதம் விதிக்கப்படும், மேலும் சில வேலைகளில் கடைகளுக்கு சீல் கூட வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.