தமிழ்நாடு சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லின் வயது சுமார் 3,200 ஆண்டுகள்(tn Excavation new report paddy 3,200 years)
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழ்வாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் என கணித்து இருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்பொழுது பல்வேறு இடங்களில் நடந்து வரும் தொல்லியல் ஆய்வுகளில் பல்வேறு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார், இந்த ஆய்வு முடிவுகள் காட்டும் தமிழ்நாடு எப்படி இருந்தது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் தற்போது கீழடி தொகுப்பு ஆதிச்சநல்லூர், சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொடுமணல், ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடத்தி வருகிறது.
இந்த இடங்களில் பல நாட்களாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், இதற்கு பிறகு இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் ஆய்வுகள் முதன் முதலாக தொடங்கப்பட்டது, அப்போது மிகப்பெரிய கட்டடத் தொகுதிகள் தமிழ்நாட்டின் தொல்லியல் துறை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது.
கீழடியில் மூன்று கட்ட ஆய்வுகளை நடத்திய இந்திய தொல்லியல் துறை அதற்கு பிறகு அங்கு ஆய்வுகள் நடத்த விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை அங்கு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டு அதன்படி 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது.
Click here to view our YouTube channel
கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதியில் எழுத்துப் பொறிப்புகள், பொருட்கள், இதன் மூலம் அங்கு ஒரு நாகரிகம் இருந்ததே உறுதிசெய்கிறது. பொதுவாக கங்கை சமவெளியில் கிமு 6ம் நூற்றாண்டு வாக்கில் இருந்த நகரமயமாக்கல் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் பொதுவான கருத்துக்கள் ஆக இருந்தது.
New Labour law changes effects in India 2021
இங்கு கிடைத்த தமிழில் எழுதப்பட்ட பொருட்களை ஆக்ஸிலரேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி முறையில் பகுப்பாய்வு செய்த போது அந்த பனை ஓடுகள் கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்தவை என தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.