சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த தமிழக அரசு குவியும் பாராட்டுக்கள் முதலமைச்சருக்கு.( TN government free food in hospitals 2021)
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் திரு மு க ஸ்டாலின் அவர்கள் இந்த பேரிடர் காலங்களில் மக்களுக்கு எல்லா வகையிலும் நன்மைகள் செய்யும் நோக்கத்தோடு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதில் ஒன்று இன்று தொடங்கப்பட்ட திட்டம்தான்.
பல மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மருத்துவமனைகளில் சரியான ஆக்ஸிஜன் வசதி, உணவு வசதி, மருத்துவ உபகரணங்கள், இன்றி உள்ளார்கள் ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை அப்படி ஒரு தாக்கம் இதுவரை ஏற்படவில்லை மேலும் தமிழக அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக நோயாளிகளுக்கு எல்லா வகையிலும் நன்மையாகவே அமைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளைகளும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு, சிகிச்சை ,படுக்கை வசதிகள், போன்றவற்றை கண்காணிக்க வேண்டும் என தமிழக முதல்வர் அதிரடி உத்தரவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தரமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள். வழங்கப்படுகிறதா என்பதை அமைச்சர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு இலவச உணவு சேவையை தொடங்கி வைத்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில் இந்த பேரிடர் ஊரடங்கு நாட்களில் தனியார் அமைப்பு சார்பில் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்க இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசு இந்த பேரிடர் காலத்தை சிறப்பாக கையாளுகிறது என்பது தெளிவாக தெரிகிறது எந்த ஒரு கொரோனா நோயாளிகளுக்கும் தரமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, உள்ளிட்டவை உடனடியாக கிடைப்பதற்கு இணையதளம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த முதலீட்டு திட்டங்கள்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை தெரிந்துகொள்ள தமிழ்நாடு அரசு இணையதளம் தொடங்கியுள்ளது மற்றும் இலவச தொலைபேசி எண்களையும் 104 வெளியிட்டுள்ளது இதன் மூலம் மக்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படக்கூடாது என்பதே அரசின் நோக்கமாக உள்ளது.