இந்த திட்டத்தின் மூலம் உங்கள் பெண் குழந்தைக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.!!!(Tn govt amazing schemes Details 2020)
தமிழக அரசு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டத்தைப் பற்றி பார்ப்போம். சிவகாமி அம்மையார் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் உங்கள் பெண் குழந்தைக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். தமிழக அரசு இந்த திட்டத்தின் மூலம் உங்கள் பெண் குழந்தை பெயரில் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறது. இந்த திட்டத்தை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்
இந்த திட்டத்தில் எப்படி இணைவது.
பொது இ சேவை மையத்தின் மூலம் இந்தத் திட்டத்தில் இணையலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் இணைவதற்கான தகுதி.
01/08/2021 முன்பு பிறந்த குழந்தையாக இருந்தால் 25,000ரூபாய் வழங்கப்படும்
01/08/2011 பிறகு உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதில் 01/08/2011 அன்று அல்லது அதற்குப் பின்பு பெண் குழந்தை பிறந்திருந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தையாக இருந்தால் அந்தக் குழந்தையின் பெயரில் நிலையான வைப்பு தொகையை. தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்படும்.
10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டு 10 வருடங்கள் நிறைவடைந்ததும். முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி விகிதமும் மேலும் கல்வி ஊக்கத்தொகை அந்த குழந்தை பெயரில் காசோலை மூலம் வழங்கப்படும்.
பெற்றோர்கள் 35 வயதிற்குள் கட்டாயம் அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்கப்பட வேண்டும்.
வீட்டில் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கவேண்டும் ஆண் வாரிசு இருந்தாள் இந்த திட்டத்திற்கு நீங்கள் தகுதியற்றவர்கள்.
உங்களுடைய ஆண்டு வருமானம் ரூபாய் 72,000 க்குள் இருக்க வேண்டும் அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களுக்கு இரண்டாவது குழந்தை இருந்தால் அந்தக் குழந்தைக்கு மூன்று வயதிற்குள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கபடுவது.
இதற்கான விண்ணப்பத்தை உங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெறலாம். மற்றும் https://cms.tn.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து மாவட்ட சமூக அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்களுக்கான சிறந்த 7 முதலீடு திட்டங்கள். யார் யாருக்கு என்னென்ன திட்டம்.
இந்தத் திட்டத்தில் நீங்கள் பயன்பெற வேண்டும் என்றால் மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தை வளர்ச்சி நல அலுவலர், ஊர் நல அலுவலர்களை அணுக வேண்டும்.