tn govt corona 3rd wave new update news

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 3ம் அலை தொடக்கம் அரசின் முயற்சிகள்(tn govt corona 3rd wave new update news)

தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 2ம் அலை பாதிப்பு கடந்த ஜூலை மாதம் முதல் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அரசு தளர்வுகளைஅறிவித்துள்ளது.  2ம் அலை பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் மற்றும் அரசு இரண்டு தரப்பையும் மிகவும் கடுமையாக பாதிப்படையச் செய்தது.

2ம் அலை தாக்கத்திலிருந்து இன்னும் யாரும் மீண்டும் வரவில்லை அதன் பாதிப்புகள் மறக்க முடியாத அளவிற்கு ஒரு வரலாற்றை எழுதி விட்டது.

ஆனால் இப்பொழுது மருத்துவ வல்லுனர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்கள். அது என்னவென்றால் 3ம் அலையின் பாதிப்பு ஏற்படாமலிருக்க அடுத்து வரும் 100 நாட்களில் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.

tn govt corona 3rd wave new update news

நாடு முழுவதும் தினசரி 30,000 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் பாதிப்பு 1500 க்கும் மேல் இருந்து வருகிறது, ஆனால் கடந்த இரு தினங்களாக பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த 20 நாட்களில் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக இப்பொழுது சென்னையில் 174 பேருக்கும்,செங்கல்பட்டில் 137பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், திருப்பூரில் 113 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இதனை இப்பொழுது முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற போர்க்கால அடிப்படையில் என்ற நோக்கத்துடன் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 10,000க்கு  மேற்பட்ட தடுப்பூசி செலுத்தும் முகாம்களை நடத்த உள்ளது.

இதனால் பெரும்பாலான மக்களுக்கு ஒரே நாளில் அதிக அளவில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு வாய்ப்புகள் அமையும்.

இதற்காக தமிழக அரசு தற்போது பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகிறது, தமிழகம் முழுவதும் தினமும் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு  மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Click here to view your YouTube channel

tn govt corona 3rd wave new update news

மேலும் மக்கள் கூடும் இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மக்கள் அனைவரும் தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என அரசு சுகாதார பணியாளர்கள் மூலம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் விழிப்புணர்வுகளை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தி வருகிறது.

Top 5 benefits of eating crab in tamil

3ம் அலையை வெற்றிகரமாக தடுக்க வேண்டும் என தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும், அதற்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது மட்டுமே சரியான தீர்வாக அமையும்.

Leave a Comment