கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு புதிய 4 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.(TN Govt introduction new treatment for covid19)
சக்திவாய்ந்த வல்லரசு நாடுகள் கொரோனா வைரஸின் முதல் அலையில் சிக்கி சின்னாபின்னமானபோது அதை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்தது இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த கொரோனா வைரஸ்க்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது இது அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது.
ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது இந்த வைரஸ் பிடியிலிருந்து மீண்டுள்ள வல்லரசு நாடுகள் இந்தியாவைப் பார்த்து அச்சம் கொண்டுள்ளது ஏனென்றால் புதிதாக உருமாற்றம் அடைந்த இந்த கொரோனா வைரஸ் அதிக வீரிய தன்மையுடன் மிக வேகமாக பரவி வருகிறது இந்தியாவில்.
இந்தியாவில் குறிப்பாக ஒரு நாளைக்கு குறைந்தது 3 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள் அனைத்து மாநிலங்களிலும் நோய் தொற்று எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு படுவேகமாக உள்ளது தமிழகம் இந்தியாவில் 3 இடத்தில் உள்ளது.

இருந்தாலும் உயிரிழப்பு மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவு மேலும் இங்கு போதிய ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள், போதிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்துதல், கபசுரக் குடிநீர், மூலிகை தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவாதற்கு எல்லா வகையிலும் விழிப்புணர்வை தமிழக அரசு எடுத்துள்ளது. அதன் வகையில் தற்போது இந்த வைரஸ்க்கு புதிய வழிகாட்டு முறைகளை அறிவித்துள்ளது.
தொற்று நோய் நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள், மற்றும் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ நிபுணர் குழு உள்ளிட்ட மருத்துவர்கள் இணைந்து புதிய சிகிச்சை வழிகாட்டுதல் முறையை வகுத்துள்ளார்.
இது அரசாணையாகவும் வெளியிடப்பட்டுள்ளது இந்த அரசாணைப்படி கோவிட் நோயாளிகள் 4 வகையாகப் பிரிக்கப்படுகின்றனர் அதன்படி விட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்தாலும் உடல்வலி, தொண்டைவலி, மூச்சு விடுதல் சிரமம், தொடர் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, இருமல், நாக்கில் சுவையும், மூக்கில் மனமும் தெரியாமல் இருந்தால் கொரோனா நோயாளியாகவே கருதப்படுவார்.

இவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர் (RTPCR ) முடிவுக்காக காத்திருக்கக் கூடாது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை உடனடியாக எடுத்துக்கொள்ளவேண்டும் வீட்டு தனிமையில் இருப்போர் 2ம் வகை இவர்களுக்கு அனைத்து அறிகுறிகளும் இருக்கும் எனில் ஆக்ஸிஜன் அளவு உடலில் 96 கீழே குறைந்து 95 ஆக மாறுபவர்கள் இவர்களுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்.
கொரோனா சிகிச்சை மையங்கள் கொரோனா பராமரிப்பு மையங்களில் இருப்போர் ஆக்சிஜன் அளவு 90-94 உடலில் இருப்போர் ஒரு நிமிடத்திற்கு குறைந்தது 24 முதல் 30 முறை மூச்சு வாங்குவோர் இங்கு சிகிச்சை பெற வேண்டும்.
இப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு நோயாளிக்கு இரத்த தட்டணுக்கள் குறைந்தாலோ அல்லது 90க்கு கிலோ ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணி மேற்கொள்ளப்படும் மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படுவோர் 90 ஆக்சிஜன் அளவு குறைந்து அவர்கள் ஒரு நிமிடத்திற்கு 30 முறைக்கு மேல் மூச்சு வாங்குவோர் இங்கு அனுமதிக்கப்படுவர்.
இவர்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் தெரபி வழங்கிய தீவிர சிகிச்சை அளிக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகங்கள் மேற்கொள்ளும் இந்த ஆணை 14 நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும்.
இந்த புதிய வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதால் இறப்புபுகளை எந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடிகிறது என்பதை ஆய்வு செய்தபின் இதை தொடர்வதா இல்லையா என நிபுணர் குழு மீண்டும் முடிவு செய்யும் என்பதை தமிழக சுகாதாரத்துறை அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்கள்.