திருமண மண்டபத்தில் திருமணம் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் உதவித்தொகை இல்லை(tn govt marriage gold scheme full details 2021)
தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம்தான் தாலிக்கு தங்கம் என்கின்ற திட்டம்.
தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசுக்கு போதிய வருவாய் இல்லை அதுமட்டுமில்லாமல் வெளியில் இருந்து கடன் வாங்கி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது காரணம் பலமுறை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மட்டுமே.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபை தேர்தலுக்கு தேர்தல் நடைபெற்றது அதில் திமுக வெற்றி பெற்று மு க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றார் அதன்பிறகு இவர் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.
இப்பொழுது இந்தியா மட்டும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமே நிதிநிலை சூழ்நிலை மிக கடுமையாக இருக்கிறது காரணம் இந்த கொரோன வைரஸ்ஸை எப்படியாவது ஒழித்து விட்டால் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடலாம்.
அதுமட்டுமில்லாமல் 2 ஆண்டுகளாக ஏற்பட்ட நிதி நிலைமையை சமாளிக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் மகளிருக்கு பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது, அதில் 5 முக்கிய திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் முதன்மையாக உள்ளது, பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் ரூ 50,000 பணம் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வி தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் மற்றும் 25,000 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதால் இப்பொழுது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நபர்களின் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலும் அல்லது வேறு ஏதாவது திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவி பெற்றிருந்தாலும் ஆய்வு செய்து அப்படி இருப்பின் அந்த விண்ணப்பித்தனர் தள்ளுபடி செய்யவேண்டும்.
zycov d vaccine full details in tamil 2021
அதுமட்டுமில்லாமல் மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் நிறைந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் நபர்கள் கார் வைத்திருக்கக்கூடாது, மாடி வீடு இருக்க கூடாது, அப்படி இருந்தால் மனு தள்ளுபடி செய்யவேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 72,000 இருப்பதை வருமான சான்றிதழை அரசு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
Click here to view our YouTube channel
மேலும் திருமண நிகழ்ச்சி திருமண மண்டபங்களில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
New Covid-19 variant what are the symptoms
இதனால் உண்மையாகவே ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டம் பயன் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.