தமிழகத்தில் மே 31 க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.(TN Govt New Lockdown Full Details 2021)
தற்போது மருத்துவர்கள் சார்பில் மேலும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் தற்போது நடைமுறையிலிருக்கும் தளர்வில்லாத இல்லாத முழு ஊரடங்கும் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும். நாடுதழுவிய பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இது மேலும் பலனளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் COVID-19 2ம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது இதன் காரணமாக இந்தியாவில் அதிக பாதிப்புடைய மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது மேலும் ஒவ்வொரு நாளும் 35 ஆயிரம் வரை பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது பலி எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.
மே மாதம் 10ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் குறைந்தபாடில்லை மேலும் நோய் தொற்று எண்ணிக்கை உயர்ந்துகொண்டே சென்றது இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மறுபடியும் ஒரு வாரத்திற்கு தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தியது.
இந்த கொரோனா 2ம் அலை கிராமப்புறங்களில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியது தமிழகத்தில் பாதிப்பு உயர முக்கிய காரணமாக அமைந்துள்ளது கிராமப்புறங்களில் கூடுதல் கண்காணிப்பு இல்லாத காரணத்தாலும் போதிய பரிசோதனைகள் செய்யாததாலும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்ததாக கருத்துகள் நிலவுகிறது.
பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு தளர்வில் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் பலர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி நேற்று (மே 24) முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் மே மாதம் 31-ஆம் தேதி முடிவடையும் இந்த ஊரடங்கு ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை அதாவது மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் மறுபடியும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இப்பொழுது இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறையை கைவிடப்பட்டால் பாதிப்புகள் அதிகமாகும் என மருத்துவர்கள் கணித்துள்ளார்கள் அதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது முடக்கம் மறுபடியும் அமல்படுத்தப்பட்டால் சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒரு வார காலத்தில் பொதுமுடகத்தினால் பாதிப்புகள் குறைந்து வந்தால் மட்டுமே மறுபடியும் ஊரடங்கில் இருந்து சில தளவூர்களை எதிர்பார்க்கலாம்.
தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு விடியாவில் பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என வருந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களை காப்பாற்றுவதற்கு மிகச்சிறப்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தமிழக அரசு அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டது.
How vegetarians can add Best protein 5 foods.
அரசு எவ்வளவோ வழிகாட்டுதல்களை வெளியிட்டாலும் மக்கள் அதை சரியாக பின்பற்றாமல் இருப்பது இதற்கு முதன்மையாக அமைந்துள்ளது இதற்கு முன்னால் இருந்த அரசும் சரி இப்பொழுது இருக்கும் அரசும் சரி சரியான திசையில் இதனை கட்டுப்படுத்த பயணித்துக் கொண்டிருக்கிறது ஆனால் மக்களிடம் சரியான ஒத்துழைப்பு இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரிய செயல்.