TN Govt Transport Corporation Jobs 2021 new

தமிழக அரசு போக்குவரத்து துறையில் 10,000 காலிப்பணியிடங்கள் அமைச்சர் பேட்டி(TN Govt Transport Corporation Jobs 2021 new)

திரு மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பதவியேற்ற அரசு இப்போது தமிழ்நாட்டில் பல்வேறு மாற்றங்களை அதிரடியாக செய்து கொண்டுள்ளது அதில் குறிப்பாக இந்து ஆலயங்களில் எல்லா சாதியினரும் ஆண்களும் பெண்களும் அர்ச்சகராக நியமிக்கலாம் என செய்திகள் வெளியிடப்பட்டு அதுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

இப்பொழுது ஒவ்வொரு துறையிலும் இருக்கும் காலிப்பணியிடங்கள் பற்றி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது 2 வருடங்களாக தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது கொரோனா வைரஸ் காரணமாக

இதில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் உட்பட 10,000 காலிப்பணியிடங்கள் உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

TN Govt Transport Corporation Jobs 2021 new

இது தொடர்பாக அவர் கூறியதாவது வரும் காலங்களில் முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் அதன்பிறகு இந்த பணியிடங்கள் எந்த காலகட்டத்தில் நிரப்பப்படும் என தெரிவித்தார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று குறைந்து வருவதால் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது   ஜூலை 5-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்ற அறிவிப்பு இப்பொழுது நடைமுறைப்படுத்தப்படுகிறது பேருந்துகளில் மகளிர் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தமிழக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துறை அமைச்சர் அவர்கள் இந்தத் துறையில் ஏராளமான குறைபாடுகள் முன்பிருந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது அது முழுவதும் சரி செய்யப்படும் சீரமைக்கப்படும் போக்குவரத்து துறை புதிய பொலிவுடன் இயங்க ஆரம்பிக்கும்

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

இப்பொழுது தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறை காரணமாக சில பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதாக 10,000 காலிபணியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார்

MOST  READ     தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு ரு1000/-

TN Govt Transport Corporation Jobs 2021 new

SETC   பேருந்துகளுக்கு மட்டும் 1300 ஓட்டுநர்கள் நடத்துனர்கள் தேவையாக உள்ளது வருங்காலங்களில் அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு இது தொடர்பான அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்

Cinnamon helps in better hair growth 3 tips

தமிழக அரசு பேருந்துகளில் இப்பொழுது திருக்குறள் பலகைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது இன்னும் 10 நாட்களில் இந்த பணிகள் முடிவடையும் பேருந்துகள் இயங்க தொடங்கினால் அனைத்து பேருந்துகளிலும் திருவள்ளுவர் புகைப்படத்துடன் திருக்குறள் இருக்கும் என தெரிவித்துள்ளார்

Leave a Comment