தமிழ்நாடு மருத்துவ துறையில் வேலை காலிப்பணியிடங்கள் ஒரு வருகைக்கு ரூ.375/- சம்பளம்(tn health therapeutic assistant new jobs 2021)
தமிழ்நாடு மருத்துவ துறையின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Therapeutic Assistant பணிகளுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடம்மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடத்துக்கு ஆண் பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடம் குறித்து சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் கல்வி தகுதி வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021.
தமிழ்நாடு மருத்துவ துறையின் Yoga, and Naturopathy System Of Medicine பிரிவில் Therapeutic Assistant கீழ் பணிகளுக்கு என மொத்தம் 135 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு 53 காலிப்பணியிடங்கள்
பெண்களுக்கு 82 காலிப்பணியிடங்கள்
Therapeutic Assistant வயது வரம்பு
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1/07/2021 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 57 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Therapeutic Assistant கல்வித்தகுதி
மத்திய மாநில அரசு அனுமதியுடன் செயல்படும் மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Diploma in Nursing Therapy கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Therapeutic Assistant சம்பள விவரம்
இந்த பணியிடத்துக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருகைக்கு அதிகபட்சமாக ரூபாய் 375/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Therapeutic Assistant தேர்வு செய்யும் முறை
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி நிலையங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
எங்கள் YOUTUBE சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்
Therapeutic Assistant விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடத்திற்கு விருப்பம் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் 25/08/2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும்.
Salmon Fish Nutrients and 8 Amazing Benefits
மேலும் இந்த வேலை வாய்ப்பை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் காணலாம்.