TN Marriage Grant Scheme Latest update 2021

தமிழகத்தில் 3.34 லட்சம் நபர்களுக்கு திருமண உதவித்தொகை அமைச்சர் கீதா ஜீவன் தகவல்(TN Marriage Grant Scheme Latest update 2021)

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் செய்யாத புதுமையான திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு செய்துவருகிறது 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்

படித்த இளம் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூபாய் 50,000 மற்றும் மாங்கல்யத்துக்கு  4 கிராம் தங்கம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்

இந்த திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது இதனால் முதல் முறையாக வீட்டில் இருக்கும் பெண்கள் கூட கல்வியைத் தொடர முடிந்தது

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை இரண்டு வருடங்களாக இந்த திட்டத்திற்கு 3,34,913 விண்ணப்பித்த நபர்கள் இப்பொழுது அந்த திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்

TN Marriage Grant Scheme Latest update 2021

புதிதாக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் இருந்து பலதரப்பட்ட மக்களிடம் கோரிக்கை வலுத்துள்ளது

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திரு கீதா ஜீவன் அவர்கள் தமிழகத்தில் இளம் பெண்களின் திருமணத்திற்காக வழங்கப்படும் நல திட்டங்கள் கடந்த இரு ஆண்டுகளாக அதிமுக அரசு நிலுவையில் வைத்துள்ளது

அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமண உதவித் தொகை கோரி விண்ணப்பம் செய்த மக்கள் கூட இப்பொழுது அந்த திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டு உள்ளார்கள் என்று தெரிவித்தார்

உடல் எடை வேகமாக அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய

கூடிய விரைவில் இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து விண்ணப்பித்த நபர்களுக்கு திருமண உதவி தொகை வழங்கப்படும் இதற்கு தமிழக அரசுக்கு 3 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது இப்பொழுது தமிழக அரசு கொரோனா வைரஸ்சால்  ஏற்பட்ட பாதிப்புகளை ஈடு செய்வதற்கு போர்க்கால  அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

TN Marriage Grant Scheme Latest update 2021

பெற்றோரை இழந்த குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கு தமிழக அரசு இப்போது முதன்மையாக சிந்தித்து வருகிறது மேலும் பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் கூடிய விரைவில் கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

top 5 tips long and successful marriage life

அந்த வகையில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆதரவற்ற 3 குழந்தைகள் தலா 5 லட்ச ரூபாய் தந்தை அல்லது தாய் இழந்த  3 குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Leave a Comment