நாங்கள் பல்வேறு தடைகளை கடந்து சாதனை படைத்துள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.(TN medical counseling Amazing details 2020)
தமிழக முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ கலந்தாய்வை தொடங்கி வைத்த போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளோம். அதற்காக பல்வேறு சட்டப் போராட்டங்கள் தடைகளை கடந்து உள்ளோம் என்று தெரிவித்தார்.
தமிழக அரசு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவ கலந்தாய்வு இட ஒதுக்கீட்டில் 7.5 % தனி உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தது ஆனால் இதற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்க நீண்ட இழுபறி ஆனது. ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் தமிழக அரசு இந்த சட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
7.5 % இட ஒதுக்கீட்டில் எத்தனை மருத்துவ சீட்டுகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்.
முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இட ஒதுக்கீடு மூலம் 400க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்வி சீட்டுகள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் என்பதை நான் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இந்த நாள் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் இந்த நாள் தமிழகத்தின் பொன்னான நாள். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திய நாள் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர் என்ற முறையில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
இதனை செயல்படுத்த கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் தனி ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு பல தடைகளை தாண்டி ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்ததன் விளைவாக இந்த பலன் கிடைத்துள்ளது. உங்களின் குடும்ப மருத்துவர் குடும்பம் என்று அழைக்கப்படும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த நடைமுறை தொடரும் மற்றும் அரசு உதவித்தொகை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.
தமிழக அரசு எதிர்ப்பது ஏன்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு மட்டும் நீட் தேர்வுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது மற்றும் இன்னும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும் பல முறை பிரதமர் மோடியை சந்தித்து கடிதம் எழுதியும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.
நீட் தேர்வு காரணமாக பல அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக வேண்டும் என்ற கனவு சிதைந்தது ஆனால் தமிழக அரசு இதற்கு தனி ஒரு சட்டம் அமைத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 தனி உள் ஒதுக்கீட்டை ஒதுக்கியது இந்தியாவில் தமிழ்நாடு அரசு மட்டுமே என்று தெரிவித்தார்.
புதிய வரலாறு படைத்த தீபாவளி பண்டிகை.
தமிழக அரசு கொண்டு வந்த இந்த உள்ஒதுக்கீடு மூலம் 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வேளாண் சார்ந்த துறைகளில் அதிக லாபம் தரக்கூடிய சிறு தொழில்கள்.
மருத்துவ கலந்தாய்வு தொடங்கியபோது மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்கள்.twitter