தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானம் 1000 தடுப்பணைகள் அமைச்சர் விளக்கம்.(tn new drone to monitor lakes and 1000 dams)
தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணுகிறார் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள். இந்த நிலையில் தமிழக நீர் நிலைகளை கண்காணிக்க புதிய ஆளில்லா விமானம், புதிய 1000 தடுப்பணைகள் போன்றவை அமைக்கப்படும் என அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணுகிறார் தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் அதன் காரணமாக அவரை பாராட்டி முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் சில தீர்மானங்களை முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேறியது.
மேலும் பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு கூட்டணி கட்சி தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சில தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் தமிழகத்தில் இனி வரும் காலங்களில் நீர் நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என கூறினார் மேலும் நிதிநிலை அறிக்கையில் கூறியது போல புதிதாக 1,000 தடுப்பணைகள் தமிழகத்தில் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் 8 கால்வாய்கள் அமைக்கப்படும்.
பிரதமரின் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 23 மாவட்டத்தில் 200 குளங்கள் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சென்னையில், 16தூண்டில் வலை கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் ஆறுகள், ஓடைகளில், குறுக்கே சாத்தியமுள்ள இடங்களில் தொடர் தடுப்பணைகள் அமைக்க திட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாகவும், முதல்கட்டமாக காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி, ஆறுகளின் குறுக்கே அணைகள் புதிதாக அமைக்கப்படும் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி மேகதாது அணைய கர்நாடக கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்தும், காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார், தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அவர் தெரிவித்தார்.
Top 10 health benefits of eating fish
தமிழகத்தில் இப்பொழுது முக்கிய பிரச்சினையாக இருப்பது நீர் பற்றாக்குறை மட்டுமே இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். காரணம் விவசாயத்துறை மேம்பட்டால் மட்டுமே தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் சரியாக இயங்கும் என்பது மட்டுமே.
Top 5 symptoms of breast cancer in tamil
தமிழகத்தில் காவிரி நதி நீர் பிரச்சினை என்பது அரசியலாக மாறிவிட்டது எந்த ஒரு கட்சி சரியாக இதனை கையாள வில்லையோ அந்த கட்சி நிச்சயம் தேர்தலில் தோற்கும் என்பது உறுதியான ஒரு விஷயம் என்பதால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி பிரச்சினையில் கவனமாக இருக்கிறது.