TN offers13 types of free groceries for ration

தமிழகத்தில் நாளை 13 மளிகை பொருட்கள் ரூபாய் 2000 விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்(TN offers13 types of free groceries for ration)

தமிழகத்தில் கொரோனா  2ம் அலை மிகத் தீவிரமாக இருந்த காரணத்தால் ஊரடங்கு உத்தரவு கிட்டதட்ட 4 வாரங்கள் அமல்படுத்தப்பட்டது இதனால் மக்களிடம் பணம் இல்லாத  காரணத்தால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் போனது.

இதனை கருத்தில் கொண்டு புதிதாக முதல்வராக பொறுப்பேற்ற முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த கொரோனா நிவாரணநிதி 4000 ரூபாய் முதல் தவணையாக மே மாதம் மக்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் திரு கலைஞர் அவர்கள் பிறந்தநாளன்று இரண்டாம்  தவணையாக 2000 ரூபாய் மேலும் மக்கள் பயன்பெறும் வகையில் 13 மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது இந்த திட்டத்தை முதல்வர் நாளை சென்னையில் துவக்கி வைக்கிறார்.

TN offers 13 types of free groceries for ration

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை மாவு, உப்பு, ரவை, அரை கிலோ, சர்க்கரை, உளுத்தம், பருப்பு, 250 கிராம் கடலைப் பருப்பு, 100 கிராம் கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், டீ தூள், ஒரு குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு, ஆகியவை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நாளை அந்த பொருட்களை வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார்.

இந்த இலவச பொருட்களை பெற நேற்று முதல் டோக்கன்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது நாளை திரு கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் என்பதால் முதல்வர் இந்த திட்டத்தை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து மக்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி முதல் இந்த பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது மேலும் ஜூன் மாதத்திற்கான நிவாரணம் ரூபாய் 2000 திட்டமும் நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இந்த பேரிடர் காலத்தில் மக்களை காப்பாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்துக் கொண்டு வருகிறது.

TN offers 13 types of free groceries for ration

எனது YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க  

முன்பு இருந்த அரசும் சரி இப்பொழுது இருக்கும் அரசும் சரி மக்கள் பயன்பெறும் வகையில் பல வகையில் இலவச பொருட்களை நியாயவிலைக் கடை மூலம் வழங்கினார்கள் மற்றும் இதனால் அதிக அளவில் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஏழை எளிய விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் பயன் பெற்றார்கள்.

New Vietnam coronavirus details in Tamil 2021

Leave a Comment