TN Online Gambling Prohibition Best Act 2023

TN Online Gambling Prohibition Best Act 2023

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது..!

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு நீண்ட கால இழுபறிக்கு பின்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இன்று அரசு தழில் வெளியிட்டுள்ளது.

TN Online Gambling Prohibition Best Act 2023 ஆன்லைன் ரம்மி மூலம் சூதாட்ட விளையாடுகளில் ஈடுபடும் இளைஞர்கள் பெரும்பாலும் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதுவரை 41 இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது.

TN Online Gambling Prohibition Best Act 2023

ஆனால் இது தொடர்பாக நீதிமன்ற வழக்கில் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது புதிய ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட கொண்டு வரவும் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

இதனை தொடர்ந்து திமுக ஆட்சியில் ஆன்லைன் விளையாட்டுகள் தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது இதற்கு ஆளுநர் ஒப்புதல் தெரிவித்து இருந்தார்.

அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டதால் சட்டசபையில் மசோதா நிறைவேற்றி சட்டமாக்கப்பட வேண்டும் இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி.

TN Online Gambling Prohibition Best Act 2023 தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர் என் ரவிக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதா மீது ஆளுநர் சில விளக்கங்கள் கேட்டு தமிழ்நாடு அரசும் உடனடியாக பதில் அளித்தது.

TN Online Gambling Prohibition Best Act 2023

ஆனால் 131 நாட்கள் இந்த மசோதாவை கிடைப்பில் போட்டு வைத்த ஆளுநர் கடந்த மாதம் 6ம் தேதி தமிழ்நாடு அரசுக்கு மீண்டும் அனுப்பினார்.

இப்படியான ஒரு மசோதாவை நிறைவேற்ற சட்டசபை அதிகாரம் இருக்கிறதா என்ற ஆளுநர் கேள்வி.

இதனால் கடந்த மார்ச் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் கூடி அதே மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது.

tamil new year 2023 these zodiacs good luck

கடந்த மார்ச் 23ஆம் தேதி ஆன்லைன் தடை மசோதாவை மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார் மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

TN Online Gambling Prohibition Best Act 2023 உடனடியா மசோதாக்களை நிறுத்தி வைத்தாலே நிராகரித்து விடும் என்று ஆளுநர் பேசியதும் பெரும் சர்ச்சையானது.

இதற்கெதிராக தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்டம் கடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

3 நாட்களுக்கு முன்னதாக ஒப்புதல் அளித்துவிட்டதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Natural hair oils for growth

மேலும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்ததால் ஆன்லைன் தடை சட்டம் உடனடியாக கெஜட்டில் அரசின் இதழில் வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சட்டம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment